நானும் என் வாசிப்பும்
புத்தகம் என் தோழி!
ஆம்
,சிறுவயதில் அப்பா புத்தகம் படிப்பார், அதை உடனிருந்து பார்ப்பேன் அதில் உள்ள செய்திகளை கருத்துக்களை எனக்கு அப்பா சொ ல்வார் ஆரம்பத்தில் புத்தகம் படிப்பதை அப்பா சொல்கிறார் என்று படித்தேன் ஆனால் நாட்களும் வருடங்களும் செல்ல புத்தகம் என் இணைபிரியா தோழி ஆகிவிட்டது தொலைக்காட்சி அதிகமில்லை காலம் அது புத்தகமே கதி என படித்துக் கொண்டே இருப்பேன் உணவு உண்ணும் போது கூட புத்தகத்தை பக்கத்தில் வைத்து படித்துக் கொண்டே சாப்பிடுவேன் காலம்செல்ல புத்தகமே கதி என படித்துக் கொண்டே இருப்பேன் உணவு உண்ணும் போது கூட புத்தகத்தை பக்கத்தில் வைத்து படித்துக் கொண்டே சாப்பிடுவேன் அதிகமுறை அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன் சாப்பிட்டுவிட்ட படி என்று முதலில் புத்தகத்தில் சிறுகதை நகைச்சுவை சினிமா செய்திகள் படித்துக்கொண்டிருந்த எனக்கு நாவல் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது திகில் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நூல்கள் நாவல்கள் அதன்பின் என்ற இந்திரா சவுந்தரராஜன் சுபா பட்டுக்கோட்டை பிரபாகர் வசந்தி என பல எழுத்தாளர்களின் புத்தகங்களை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன் காலம் செல்ல என் கவனம் இலக்கிய பக்கம் சென்றது சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி சீவக சிந்தாமணி எனப் படித்து பின் தமிழ் மீ து ஆர்வம் வந்து உலகப் பொதுமறை திருக்குறள் நாலடியார் இன்னா நாற்பது இனியவை நாற்பது களவழி நாற்பது திரிகடுகம் திருமந்திரம் திருவாசகம் தேவாரம் திவ்ய பிரபந்தம் என தமிழும் ஆன்மீகமும் கலந்தே இன்று என் புத்தக வாசிப்பு சென்றுகொண்டிருக்கிறது என்னதான் விஞ்ஞானம் மாறினாலும்கா லம்
மாறினாலும்செ ய்திகளை நொடியில் அறிய இணைய வழி இருந்தாலும் இதுவா இன்பம் இல்லை நமக்கு இந்த புத்தகம் படிக்க வேண்டும் என்ற சிந்தனை தோன்றி நம் சிந்தனைக்குதோன்றி அந்த புத்தகத்தை கடைகளில் தேடி நூலகத்தில் தேடி வாங்கி வந்து முதல் பக்கத்தில்உள்ள படத்தின் அழகை ரசித்து இரண்டாம் பக்கத்தில் புத்தகப் பதிப்பு எந்த வருடம எம்ந்த அச்சகம் எந்த வெளியீட்டாளர் எவ்வளவு விலை என்பதை அறிந்து பின் அந்த புத்தகத்தின் முன்னுரையை படித்து ஒரு ஒரு பக்கமாக திருப்பி படிப்பது என்பது என்ன ஒரு மன இன்பம் இப்படி படிக்கும் புத்தகத்தின் மகிழ்ச்சி நொடியில் கைப்பேசியில் கணினியில் தேடி அதை பெரிதுபடுத்தி உற்றுஉற்று படிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உள்ளது இப்படி மகிழ்ச்சியை தரும் புத்தகத்தை நான் மட்டும் படிக்காமல் என்னை சுற்றி உள்ளவர்ளிடமும் இந்த புத்தகத்தை படியுங்கள் எவ்வளவு அருமையாக எழுதி உள்ளார்கள் என்று கூறுவதுடன் என் குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்ட என் அப்பாவின் வழியில் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை குழந்தகளுக்கு படித்து காண்பிக்கிறேன் ஒரு ஒரு வரியாக புரியும்படி படித்து அதிலுள்ள கருத்துக்களை கூறுகிறேன் இதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிம்மதியும் ஏற்படுகிறது புத்தகத்தை வாசிப்பது என் விருப்பம் எனக்கு யாரும் இல்லை என்றாலும் என் புத்தகம் என்னுடன் பயணிக்கும் அனுபவம் தரும் மனமகிழ்ச்சியை தரும் புத்தகமே நீ என் தோழி புத்தகமே நீ என் பிள்ளை புத்தகமே நீ என் உயிர் புத்தகமே என் உயிர் போனால் மட்டுமே உன்னை கைவிடுவேன்என் என் உயிருள்ள வரை உன்னை படிப்பேன் வாசிப்பதே என் சுவாசம் என்பதால்.
நன்றி
- ரத்னா செந்தில் குமார்
திருவண்ணாமலை
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞