“என் வாழ்க்கை முன் போல் இல்லை” “என் வாழ்க்கை முன் போல் இல்லை”
அந்த அனுபவத்தை தந்தது வாசிப்பு.
கல்லூரி முடித்து அலுவலகம்
செல்ல தொடங்கினேன். முழு நேரம்
அலுவலக பணி என்பதால் எங்த செயலிலும் எனது கவனத்தை செலுத்த அவகாசம்
கிடைக்கவில்லை. அதன்பின் திருமணம், குழந்தை என வாழ்க்கை
நகர்ந்தது. ஆனால் வீடு, அலுவலகம் என தொடர்
இயந்தரதனமான வாழ்வியல். நேரம் கிடைப்பதே அறிதாக இருக்கும். அந்த நேரத்தில் எனக்கான நேரம் என்பது கனவாக இருக்கும்.
அலுவலகம் செல்லுவதை 3
வருடங்கள் முன் நிறுத்திக்
கொள்ளும் நிலை உண்டானது. அக்குபங்சர் பட்டயம் கற்கும்
வாய்ப்பும் கிடைத்தது. ஆசிரியர் ஆ.உமர்பாரூக் அவர்கள் அறிமுகம் எனக்கு 46 வயதில் அக்குபங்சர் பட்டயம் பயிலும் போது சென்ற ஆண்டு கிடைத்தது. நீ கூழாங்கல்லாய் இருந்தாலும் நல்லாசிரியர் ஒருவர் கையில் கிடைத்தால் வைரமாய் மாற்றப்படுவாய் என சொலவடை உண்டு . எத்தனை நிதர்சனமான வரிகள். தமிழ் இரண்டாம் மொழியாக படித்து இருந்தாலும், கல்லூரி முடித்து அலுவலகம் சென்றபின் ஆங்கிலம் பயன்பாடு மட்டுமே அதிகமாக இருந்தது. தமிழ் எழுதும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரின் வழிகாட்டலின் படி மாதம் தோறும் இலக்கிய நூல்களை வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் “அகவிழி இலக்கிய சந்திப்புகள்” எனக்கு அறிமுகமானது. மாதம் ஒரு புத்தகம் வாசித்து விமர்சனம் எழுதி பதிவிட வேண்டும். வாசிப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றத்தை, முன்னேற்றத்தை
இங்கு பகிர்ந்து கொள்வது அவசியம். வாசிப்பு அது ஒரு புது அனுபவம். அதிலும் விமர்சனம் மலைப்பாக இருந்தது. ஆனால் தொடர்ந்து விமர்சனம் என்ற பெயரில் புத்தக சுருக்கம் எழுதி அனுப்பி வந்தேன். தொடர் முயற்சி செய்தமைக்கு எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிட்டியது,. எழுத்தாளரை எப்படி அணுகுவது, எழுத்து உலகிற்கு நாம் புதுவரவு ஆயிற்றே நம்மால் முடியுமா என என்னுள் இருந்த அச்சத்தை எழுத்தாளர் கா.சி.தமிழிக்குமரன் முதல் உரையாடலின் போதே நீக்கினார். அவரின் முழு ஒத்துழைப்புடன் ஆசான் அ.உமர்பாரூக் வழிகாட்டலின் பரிசாக - புத்தக வெளியீடு- “தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளையுடன்” இணைந்து பாரதி புத்தகாலயம் எழுத்தாளர்கள் நேர்காணல். முற்போக்கு எழுத்தின் தடங்கள்- “படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி” - எழுத்தாளர் கா.சி.தமிழ்க்குமரன் அவர்களுடன் நேர்காணல் - சந்திப்பு. இந்த ஊரடங்கு கொரோனா காலத்தில் எனக்கு உறுதுனையாக இருந்தது வாசிப்பு. வாசிப்பு ஆர்வம் பல பயிலரங்கம் நிகழ்வுகள் கலந்து கொண்டு கற்கும் வாய்ப்பு உருவானது. ஹைக்கூ பயிலரங்கம். அதனுடைய நீட்சி தோழமைகளோடு எனது 12 ஹைக்கூ கவிதையும் தேர்வாகி "கண்ணில் தெரியும் கடவுள்" - ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு “தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளை” - வெளியானது. என் ஆசான் கொடுத்த வழிகாட்டலும் வாசிப்பு வழங்கிய நன்நம்பிக்கையும் என்னை பொது தளங்களில் படைப்புகளை சமர்பிக்க ஊக்கப்படுத்தியது. அதனுடைய நீட்சியாக புக்டே இணையத்தில் என்னுடைய முதல் முயற்சியாக நான் எழுதிய அனுப்பிய சிறுகதை - "தாய் மனசு" மற்றும் "ஹைக்கூ கவிதைகள்" இரண்டு முறை வெளியானது. அலைவரிசை இணையதளத்தில் போட்டிக்கு நான் அனுப்பிய சிறுகதை படைப்பு "விடுதலை" முதல்கட்ட தேர்வில் தேர்வாகி வாக்கெடுப்புக்காக இணையத்தில் வெளியாகியுள்ளது. . "சொல் பாரதி சொல்" பொதுகை தமிழ் அறக்கட்டளை நடத்திய உலகளாவிய கவிதை வாசிப்பு நிகழ்வில் பங்களித்து டிசம்பர் 11, 2020 மகாகவி பாரதியின் பிறந்த நாள் அன்று கவிதை தொகுப்பு வெளியீடுகிறது. அதில் என்னுடைய படைப்பும் ஒரு அங்கமாகிறது என்பதும் மகிழ்ச்சி. வாசிக்க வாசிக்க "வாசகசாலை" 12 வாரம் தொடர் வாசிப்பு போட்டியிலும் கலந்து கொள்ள ஆர்வம் எழந்தது, கலந்து கொண்டு, தொடர் வாசிப்பாளர் தேர்வில் தேர்வாகியுள்ளேன். பல பயிலரங்கம் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வீறுகவியரசர் 10 வாரம் தொடர் வாசிப்பு போட்டி - வாசித்து விடையளித்து கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பல பங்களிப்பு சான்றிதழ் கிடைக்கபெற்றேன். இது அத்தனையும் எப்படி சாத்தியமானது என சிந்தித்து பார்த்தால், இரண்டு ஆண்டு வாசிப்பு பழக்கம் தான் என்னை இந்த படைப்புகளை படைக்கும் படைபாளியாக
மாற்றியுள்ளது என்பது நிதர்சனம். “வாசிப்பு"- இந்த ஒற்றை வார்த்தை என்னுள் உண்டாக்கிய மாற்றத்தை, மாயத்தை, ஏற்றத்தை சொல்ல சொல்லில் அடங்காது. வாசிப்பு வாசிப்பவரின் சிறகுகளை விரிக்கும் என்பது நிதர்சனம் . வாசிப்பு நம் அக நம்பிக்கையை தூண்டும் விளக்காக, இருளை விரட்டும் வெளிச்சமாக உள்ளது. வாசிப்பு என்னுள் மன தைரியம் அளித்தது, அளிக்கிறது. ஒருவரின் வாழ்நாளில் எல்லாவித அனுபவங்களும் ஒருசேர கிடைக்க உதவுகிற தோழமை வாசிப்பு. மனித வாழ்க்கையின் அனைத்து கோனங்களையும், இயல்புகளையும், பன்புகளையும், வெற்றிகளையும், தோல்விகளையும், இன்பங்களையும், துன்பங்களையும், நம்பிக்கைகளையும், துரோகங்களையும், மகிழ்ச்சியையும், துன்பங்களையும், வாசிப்பு நமக்கு அளிக்கிறது என்றால் அது மிகையாகாது. வாசிக்க வாசிக்க நம் தேடல் விரியும். வாசிப்பின் வழியாக நாம் உலகெங்கும் பயணிக்க முடியும். வாசிப்பு ஒருவரை பன்முகத் தன்மை கொண்ட நபராக மாற்றும். உளவியல் நிபுணராக மனதின் மொழி அறிய வாசிப்பு உதவுகிறது. வாசிப்பு என்னை சிந்து சமவெளி நாகரிகத்திற்கு அழைத்து செல்கிறது. தொல்லியல் சார்ந்த கட்டுரைகள், பல நூற்றாண்டு முன் நடந்த நிகழ்வுகளை, அவர்களின் நாகரிகம், பண்பாடு, வணிகம், வாழ்வியல் போன்ற செய்திகளை என் கண் முன்னே காட்சி படிவமாக தருகிறது. பார்க்காத ஊர், பேசாத மனிதன், பார்வையற்ற மனிதனின் பார்வை, மனித இன வளர்ச்சி, இயற்கை, பிரபஞ்ச ரகசியங்கள், பலதரப்பட்ட மக்களின் மனம், உளவியல், நிறுவன அனுபவம், அரசியல், மானுடவியல், நம்மை பற்றி..... இப்படி பல தகவல்களை அள்ளி அள்ளி தருகிறது வாசிப்பு. வாழ்நாள் முழுவதும் படிக்க ஆர்வம் எழுந்துள்ளது. இந்த இரண்டு வருட வாசிப்பு அனுபவம் விலைமதிப்பில்லாத தன்நம்பிக்கையை எனக்கு அளித்துள்ளது அதுமட்டுமின்றி புத்தகத்தை குணிந்து வாசிக்க வாசிக்க நான் மேலேழுந்து செல்கிறேன் என்பதையும் உணர்கிறேன் வாசிப்பை நேசிப்போம், வாழ்நாள் உள்ள வரை வாசிப்போம். சுவாசம் போல் வாசிப்பும் நம் அங்கமாகட்டும். வாசிப்பு
அனுபவம் மட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்றால் என் வாழ்க்கை நிறைய வெற்று இடம்
நிரம்பி இருந்து இருக்கும். அந்த
வெற்றுயிடம் இன்று வாசிப்பால் நிறைந்துள்ளது, “என் வாழ்க்கை முன் போல் இல்லை” என்ற தலைப்பில் என் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு "RECEIVER MEDIA" தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி திருமதி.சாந்தி சரவணன் சென்னை. For our regular
updates follow us in social media platforms. தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞 |