நானும் என் வாசிப்பும் - மு.விக்னேஷ் குமார்

 


                 நானும் என் வாசிப்பும்

 

    வாசித்தல் என்பது சிலபேருக்கு நேசித்தல், பலபேருக்கு நேரத்தை வீணடித்தல்.குறிப்பாக பாட புத்தகத்தை தாண்டி வாசிக்கும் அனைத்தும்,நேரத்தை வீணடிக்கும் செயல் என்பது இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் தாண்டி,நேற்றை தலைமுறையான பெற்றோர்களின் மூலமாக மிகவும் கசப்பாக வெளிக்காட்டப்படுகிறது.என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி ஆதலால் நீ இதைதான் படிக்க வேண்டும் இதில் தான் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை என் முன்னே இல்லை. இன்று எனக்கு 23 வயது, எனக்கு வாசிப்பின் மீதான நீக்கமற ஆர்வம் என் 20 ஆவது வயதில் தான் பிறந்தது,ஒரு சராசரி மாணவனை போல நானும் என் இளங்கலை முடித்த தருணம் அந்த வயதில் தான்,நான் படித்தது பி.எஸ்.ஸி.கணினி அறிவியல்,பணம் சம்பாதிக்க இதை படிக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும். மகிழ்ச்சியும்,மண நிறைவும் அதில் இருக்காது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல எனக்கு தெரிந்தது,என் நண்பனின் இசையில் சில குறும்படங்களுக்கு பாடலும் அப்போது எழுதிக்கொண்டு இருந்தேன்,நல்ல பாடலை எழுத (குறிப்பு:நல்ல பாடலை எழுத)தமிழ் மொழியை ஆழமாக கற்க வேண்டும் என்ற திண்மையோடு என் அடுத்த படிப்பின் பயணமாக முதுகலை தமிழை தேர்ந்தெடுத்தேன், நான் தேர்ந்தெடுத்தேன் என்பதை விட தமிழ் தான் என்னை தேர்ந்தெடுத்தது அதுவும் பார் போற்றும் பச்சையப்பன் கல்லூரியில்.கவிதை போட்டிகள், கலந்துரையாடல்கள், சொற்பொழிவுகள், அறக்கட்டளைகள் நடத்தும் விழாக்கள், தொலைகாட்சி நிகழ்வில் வென்றமை என சென்ற இரண்டு ஆண்டுகள் ஒரு தாய் பிரசவத்தில் தன் குழந்தையை பராமரிப்பது போல், தமிழ் தாய் என்னை பராமரித்து பிரசவத்தில். கல்லூரியில் படிக்கும்போதே கல்லூரி பேராசிரியருக்கான தேசிய தகுதி தேர்வில்(NET) தேர்ச்சி பெற்றேன் இன்று கல்லூரி பேராசிரியராக உருமாற காத்துக் கொண்டு இருக்கிறேன், இந்த நிகழ்வு சாத்தியமாக எனக்கு உறுதுணையாக இருந்தது சென்னையில் உள்ள நூலகங்களும் அங்கு எனக்கு வாசிப்பதற்காக கிடைத்த புத்தகங்களுமே.



இந்த ஆண்டு நடந்த புத்தகக் காட்சியில் "விகடன்" பிரசுரத்தில் வேலைக்கு சேர்ந்தேன், காசுக்காக என்பதை தாண்டி எழுத்தாளர்களின் அறிமுகம், படைப்பாளி மற்றும் படிப்பாளி இவர்களோடு நடந்த உரையாடல், வாசகர்களின் புத்தகம் வாங்கும் முறை, வாசிப்பில் உள்ள வகை என்று அனைத்தையும் அறிந்துக் கொண்டேன், முதல் முறையாக லட்சக்கணக்கான புத்தகங்களுக்கு மத்தியில் என் பிறந்தநாள் சென்றது, வேலை செய்து கிடைத்த பணத்தை அப்படியே புத்தகம் வாங்க பயன்படுத்தினேன், கொரோனா காலகட்டத்தில் அவை அனைத்தையும் படித்தேன். Few Minutes Please என்ற வலைஒளி வரிசை நடத்திய புத்தக விமர்சன போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றேன், அதில் ஒரு புத்தகம் வாசித்து என் பார்வையை சொன்னேன் நான்கு புத்தகம் பரிசாக வந்தது, பணம் மட்டும் தான் குட்டி போடுமா? புத்தகமும் குட்டி போடும் என்ற ஒரு கவிதையை எழுதி வெளியிட்டேன். இந்த கட்டுரையை எழுதவும் எனக்கு வழிகாட்டியாக இருந்தது இந்து தமிழ் திசை நாளிதழில் நான் தினமும் வாசிக்கும் கட்டுரைகளே, புத்தகம் வாசிப்பதால் முன்பை விட அனைத்தையும் அனைவரையும் பேரன்போடு நேசிக்கிறேன், இவை அனைத்திற்கும் காரணமான ,”நான் வாசித்து அனுபவம் பெற்ற புத்தகங்களுக்கு இந்த கட்டுரை வழியே என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                                                                                         கட்டுரையாளர்

                                    மு.விக்னேஷ் குமார்

                                          சென்னை

                                         

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post