நான் பார்த்ததிலே - முத்துகிருஷ்ணன்

 



சென்னையிலிருந்து வாகமன் பயணம்:



டிசம்பர் 24 2019 ஃபேமிலி எல்லாரும் சேர்ந்து சென்னையிலிருந்து வாகமன் நோக்கி காரில் பயணம் போனோம்.இது அதைப் பத்தின பதிவு தான்

இரவு 8 மணிக்கு  சென்னையிலிருந்து காரில் கிளம்பினோம் . மார்கழி குளிர்ல இளையராஜா பாட்டும் அங்க அங்க நின்னு காபி  குடிச்சு போனோம் காலையில 8 மணிக்கு தேனி சென்றடைந்தோம். ஒரு சின்ன லாட்ஜில் தங்கி குளிச்சிட்டு அதுக்கப்புறம் சுருளி தீர்த்தம் .முதல் பயணம் சுருளி தீர்த்தம் போய் நல்ல மூலிகை தண்ணியில நல்லா ஒரு குளியலை போட்டோம்.

சுருளி தீர்த்தத்தில் இருந்து காலையில் டிபன் சாப்பிட்டு வாகமன்க்கு போக ரெண்டு வழி இருக்கு  கூடலூர் வழியாக போறது மற்றொன்று தேக்கடி வழியாக போறது. நாங்க அடுத்தகட்டமாக தேக்கடி போகணும்னு முடிவு பண்ணி இருந்தோம் அதனால தேக்கடி வழியாகவே போனோம். மதியம் 3 மணிக்கு தேக்கடி சென்றடைந்தோம்.அங்க  யானை சவாரியும் போயிட்டு அங்க தேவையான பொருள்கள் எல்லாம் பர்சேஸ் பண்ணிட்டு எட்டு மணிக்கு வாகமன் நோக்கி கிளம்பினோம்.ரொம்ப இருட்ட  தேக்கடி பக்கத்திலேயே ஒரு இடத்துல தங்கிட்டு காலையில கிளம்பினான் முடிவெடுத்தோம்.இரண்டாவது நாள் பயணமாக அடுத்த நாள் காலையில  விடி காலையிலேயே எந்திரிச்சு வாகமன் நோக்கி எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.




தேக்கடியில் இருந்து நேராக அடுத்த பயணம் வந்து கட்டம்பனான ஒரு இடம் இடுக்கி பக்கத்துல இருக்குற ஒரு சின்ன கிராமம் தான் அது .கட்டம்பனான பக்கத்துல. ஒரு தேனீ வளர்க்க கிராமத்துக்கு போனோம் அந்த கிராமத்தில் மொத்தமே ஒரு முப்பது குடும்பம் தான் இருக்கும், அந்த முப்பது குடும்பத்தோட தொழிலுமே வந்து தேனி வளர்க்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா அந்த டப்பாவை தேனி வளர்ப்பு முறை எப்படி என்பதையும்  சொல்லித் தருவாங்க .பலவகையான தேன் வச்சிருந்தாங்க பச்சை மிளகாய் பூண்டு தினை அந்த மாதிரி நிறைய வகையான தேன் ,எங்களுக்கு தேவையான அளவு தேனும் வாங்கிட்டு கொஞ்சம் மெழுகு மட்டும் வாங்கி கிட்டு .அங்கிருந்து அடுத்த இடத்துக்கு நாங்க கிளம்பனும்.அடுத்த இடம் ஒரு தூக்கு பாலம் அந்த தூக்கு பாலத்தில் ஒரு இரண்டு கிலோ மீட்டருக்கு வந்து ஆறு அந்த ஆற்றுக்கு மேலாக முன்னெடுக்க போது இரும்பு பாலம் அந்த பாலத்துக்கு அக்கரையில் இருந்து ஒரு சின்ன ஐயப்பன் கோவில்  அதனால இங்க இருந்து வந்து படகு சவாரி தான் அந்த படகு சவாரியில் ஒரு நிமிஷ பயணத்துல  ஐயப்பன் கோவிலுக்கு போய் சேர்ந்தோம்.

எல்லாம் முடிச்சிட்டு அன்றைக்கு இரவே வந்து ஒரு 6 மணிபோல வாகமன் நோக்கி போகணும் போற வழியில ஏவிடி தேயிலை தோட்டம் இருந்தது அதே இரவு நேரத்தில் ஆறு மணிஅனுமதிக்கில. நாங்க நேராக வாகமன் கே போயிடோம். நைட் ஸ்டை பண்ணிட்டோம் அன்னைக்கு கிறிஸ்துமஸ்.



என் லைஃப்ல மறக்க முடியாத ஒரு இரவு.கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் எல்லாரும் தீமூட்டி ஒரு பெரிய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.அன்னைக்கு இரவு நல்ல பணி . பயங்கர பனி மூட்டம் இருந்தது சாப்பிட்டு பத்து மணியிலிருந்து ஒரு பதினோரு மணி வரைக்கும் ஊரெல்லாம் ஒரு பெரிய ஒரு நடை போயிட்டு வந்தோம்.சரியா ரெண்டு நாள் நாங்க தங்கியிருந்தோம். ஒரு ஆறு இடம் முக்கியமான இடங்கள் பில்லாவில் சைட்சீிங் ,ஒரு சர்ச். நம்ம கொடைக்கானல் மாதிரி ஒரு பெரிய பார்க் ஒன்னு இருக்கு.அதுபோக தொப்பித் தூக்கிப் போற மாதிரி ஒரு இரண்டு இடம் இருக்கு.அடுத்த இரண்டு நாள் கப்புறம் 28ஆம் தேதி இரவு அங்கிருந்து சென்னைக்கு திரும்ப பயணம் ஆகிட்டோம்.

-முத்துகிருஷ்ணன்


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

 

Previous Post Next Post