தலைப்பு: என்
வாழ்கை முன் போல் இல்லை
முன்னுரை:
என் வாழ்வில் வந்த திருப்புமுனை என் தாத்தா
எஸ். ராமசாமி அவர்கள் ஏனென்றால் என்னை அவர்கள் பிள்ளைகளை விட மிகவும் பாசமாக
வைத்து கொள்ளும் ஒரு உறவு. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கீஷம் என் தாத்தா.
அன்பும்,இரக்கமும் கொண்டவர்.
தாத்தாவைப்பற்றி:
என் தாத்தா
பெயர் எஸ். ராமசாமி என் தாத்தா பிறந்த ஊர் செக்காபட்டி, நிலக்கோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தார். என்
தாத்தா பிறந்த தேதி 27.07.1953 திங்கட்கிழமை பிறந்தார். என் தாத்தா படித்த
பள்ளியின் பெயர் அரசு மேல் நிலைப் பள்ளி,செக்காபட்டி, திண்டுக்கல் மாவட்டம். என் தாத்தா பணியாற்றிய இடம் தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியம், மதுரையில் பணியாற்றினார்.
அறுபது வயதில்
ஓய்வு பெற்றார்.பள்ளிக் காலம்:
பள்ளியை
செக்காபட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்தார், அங்குள்ள ஆசிரியர்களுக்கு என் தாத்தாவை
மிகவும் பிடிக்கும் என்று என் அம்மாச்சி கூறுவார்.
அரசு பொது
தேர்வில் என் தாத்தா தான் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்றார். அத்துடன் அவர்
படிப்பு முடிந்தது. அவரது எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல அவ்வளவு தெளிவாகவும்
அழகாகவும் இருக்கும். அவர் குடும்பத்தில் படித்தவர்க்ள் யாரும் கிடையாது. அவர்
மட்டுமே முதல் முதலாக பள்ளிப்படிப்பு முடித்து அவரது சொந்த முயற்சியில் அரசுப்
பொது தேர்வுகள் எழுதி பல சோதனைகளுக்கும் வறுமைக்கும் பிறகு பணியை தொடர்ந்தார்.
பணியில் இருந்து போது:
தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியம் மதுரையில் அலுவலகராக பணியாற்றினார் அப்புறம் படிப்படியாக
முன்னேறி இறுதியில் என் தாத்தா பணியாற்றிய பதவி கோட்டக்கணக்கர். சிறப்பான பதவியில்
பணிபுரிந்து ஓய்வுப் பெற்றார். அரசுப் பதவி கிடைத்து தனது வாழ்க்கை பயணத்தை
விருப்பமுடன் ஆரம்பித்தார். அவர் தனது வேலையை அவ்வளவு விருப்பமுடன் முழு
ஈடுபாட்டுடன் ஓய்வின்றி உழைத்தவர். அவரது வேலை செய்வதில் இருந்த விருப்பமும் அவரது
எழுத்துக்கள், நேர்மை, ஆர்வம் இவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்
குடும்பத்தை விட உயர்வாக நினைத்தது பணியை மட்டுமே.
ஓய்வுப்பெற்ற போது:
ஓய்வு பெறும்
போது அனைத்து மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாராட்டுகளையும், அன்பையும், பரிசுகளையும் அளவின்றி பெற்றார்.
அவருக்கும் அவர் திறமைக்கும் கிடைத்த மரியாதையை பார்த்து நானும் என் தாத்தாவைப்
போல் ஓரு சிறந்த பதவியில் நேர்மையுடன், அன்புடனும் முழு ஈடுபாட்டுடனும் உழைத்து வாழ்க்கையில்
படிப்படியாக முன்னேற ஆசைப்படுகிறேன் முயற்சி செய்து முன்னேறுவேன்.
என் தாத்தாவின் கையெழுத்து:
நான் முன்பே
கூறியுள்ளேன் அவரது எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல அவ்வளவு தெளிவாகவும்
அழகாகவும் இருக்கும். என் தாத்தா கையெழுத்தைப் பார்த்தால் முத்து முத்தாக கண்ணில்
ஒத்தி கொள்ளும் அளவிற்கு இருக்கும். எனக்கு என் தாத்தாவின் கையெழுத்து மட்டுமே
பிடிக்கும். அவர் 1986-2014 வரை டைரிகள் எழுதியுள்ளார். டைரி எழுதும்
பழக்கம் எனக்கும் கத்துக்கொடுத்தார். ஆனால் என் தாத்தா என்னோடு இல்லை.
முடிவுரை:
என் தாத்தா என்னிடம் அடிக்கடி கூறும்
வார்த்தை " முயற்சி திருவினையாக்கும் "
என்னும்
தாத்தாவின் வார்த்தைப்படி வாழ்ந்து வருகிறேன். நன்றி
இப்படிக்கு
தி.திவ்யா
பரவை மதுரை.
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞