வணக்கம்,
என் பெயர் உ.திலீபன், நான்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எனும் ஊரில் “குருஜீ ”
Construction மற்றும் Home Automation தொழில் செய்து
வருகிறேன். நான் எடுத்து கொண்ட தலைப்பு “நானும் என் வாசிப்பும்”. இது போன்ற தலைப்புகள் இனி வரும்
காலங்களில் இளைய தலைமுறையினர் கேள்வி படவே அரிதாகிவிட்டது. ஏனெனில்
சமூக ஊடகங்களிலும், கைபேசி பயன்பாடும் இக்கால வாழ்க்கையை கைது
செய்து, மனதுக்கும் மூளைக்கும் விலங்கிட்டுவிட்டது என்பதே உண்மை.
எனக்கு இப்பழக்கத்தை ஊட்டியது எனது பாட்டி. சிறு
வயதில் ஒரு கதை புத்தகத்தை கையில் கொடுத்து, இப்புத்தகத்தை படித்துவிட்டு
நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில் கூறும் பிள்ளைக்கு நான் பரிசு தருவேன்
என்று ஆரம்பித்த பழக்கம். இன்று வரை புத்தகத்தின் மேல் உள்ள காதல்
வளர்ந்து கொண்டே வருகிறது.
நான் இலக்கியம்,
கவிதை, கட்டுரை, அறிவியல்,
ஆன்மிகம், சுயமுன்னேற்றம் போன்ற பல பிரிவுகளில்
படித்திருந்தாலும், ஒரு குறிபிட்ட என் வாழ்க்கையை, என் தொழிலை சிறப்பாக நடத்த ஒரு கருவியாக பயன்பட்ட ஒரு புத்தகத்தை பற்றி இங்கு
கூற விரும்புகிறேன்.
“டேல் கார்னகி” எனும் எழுத்தாளர் எழுதிய “How to win friends and influence people” தமிழில் நண்பர்களை எளிதாக பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி” என்ற மிக அருமையான ஒரு புத்தகத்தை வாசித்தேன். இதில் எழுத்தாளர் தன் சொந்த கருத்துகளை மட்டும் பயிரிடாமல், தலை சிறந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் பின்பற்றிய இரகசியமான வழிமுறைகளையும் பேட்டி கண்டு தொகுத்து புத்தகமாக அளித்துள்ளார்.
ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாசிக்கும் விதம் மாறுபடும்
சில புத்தகங்களை நாம் ஒரே மூச்சில் படிப்போம், சிலவற்றை சிறுக சிறுக படித்தும்,
சிலவற்றை எப்பொழுதாவது படிப்போம். இது போன்ற சுய
முன்னேற்ற சார்ந்த புத்தகங்களை நாம் முக்கிய வாக்கியங்களை ஒரு பென்சில் கொண்டு அடிகோடிட்டு
பின் தேவைப்படும் போதெல்லாம் முக்கிய வரிகளை நாம் வாசித்து அதை நம் வாழ்க்கையில் அன்றாடம்
பயன்படுத்த வேண்டும். இது போன்ற புத்தகங்கள் என் வாழக்கையிலும்,
தொழிலிலும் மிகப்பெரிய நல்ல மாற்றகளை தந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
எனவே புத்தகம் வாசிப்பை ஒரு வேலையாக பார்க்காமல் அதன் உண்மையான சுவையை
அறிய இக்கால குழந்தைகளுக்கு நாம் வழிகாட்டுவது நம் கடமை!!!
வாழ்க நன்றி
-உ.திலீபன்
நன்னிலம்.
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞