நானும் என் வாசிப்பும்
சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்கும் ஒரு மாணவனுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், அதில் ஆச்சிரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. அதுவே, புத்தகத்தைக் கண்டால் 10 அடி தலை தெரிந்து ஓடுபவனுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டாவது, கருங்கல்லுக்கு காதல் உண்டாவது போல, அவ்வளவு ஆச்சரியமான ஒன்று. இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால், “மௌனம் பேசியதே” சூர்யாவிற்க்கும் காதல் மலரும் தருணம் தான். அப்படி தான் எனக்குள் காதல் முளைத்தது புத்தகத்தின் மீது.
என்னுடைய அப்பாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. எங்கு சென்றாலும் ஒரு விருந்தாளியையும் உடன் கொண்டு வருவார். ஆனால் எனக்கு என்னமோ அவர்களிடம் செல்ல என்றுமே மனம் வந்ததே இல்லை. 22 வருடத்தில் என்றுமே நெருங்கியதில்லை அவர்களிடத்தில். ஆனால் இந்த ஊரடங்கு திருத்தி அமைத்தது அந்த சரித்திரத்தை..
அது வரை அலமாரியில் அடிக்கி வைக்க பட்டிருந்த எங்கள் வீட்டு விருந்தாளிகள்(புத்தகங்கள்) பக்கம் நான் அடி எடுத்து வைத்தேன். அவர்ளிடம் எனக்கு தான் ஏதோ மன கசப்பு, அவர்களுக்கு என் மேல் அளவில்லா பிரியம். நான் என்று அவர்களிடம் நெருங்கினேனோ அன்றே எங்களுக்கு இடைப்பட்ட பந்தத்தை உணர்ந்தேன்.
அப்படி நான் வாசித்த முதல் புத்தகம், இராமாயணம். அதுவே ஒரு உற்சாகத்தை கொடுத்தது அடுத்தடுத்து படிப்பதற்கு, இவ்வாறு தொடங்கியது எங்கள் பந்தம்.
ஒரு புத்தகத்தின் வெளிப்பாடு, அதை வாசிக்கும் நபரின் செயலின் பிரதிபலிப்பை பொறுத்து அமையும். அப்படி என் செயலை மாற்றிய புத்தகங்களின் முதல் புத்தகம், அப்துற் றஹீம்-ன் வாழ்க்கையில் வெற்றி. இந்த புத்தகம் எனக்குள் ஒரு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. என் திறமையை உணரவும், வெளிப்படுத்தவும் தூண்டுகோலாக இருந்தது.
கல்கி யின், புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். அவரது எழுத்துகளில் வாழ தொடங்கினேன். ஒவ்வொரு கதாபாத்திரங்களும், ஒவ்வொரு காட்சிகளும் என்றும் அழியா பிம்பத்தை மனதிற்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக, சோலைமலை இளவரசி-யில் காதல் காட்சிகளும், கடைசியில் காதநாயகனின் ஏக்கமும், சில மணி நேரம் என்னை திக்கு முக்காக ஆக்கி விட்டது. பார்த்திபன் கனவில், விக்கிரமச்சோழன் நாடு கடத்தப்பட்டு கப்பலில் ஏறியதும், குந்தவிதேவி காதல் ஏக்கத்தோடு பார்க்க, அதை இரவு நிலவை கடல் அலையில் காணும் போது, அந்த கலங்கிய கண்கள் நியாபகம் வர, கல்கி யின் எழுத்து என் மனதில் ஆழ்ந்து பதிந்தது.
சில மாதங்களுக்கு முன்பு வரை, சந்தோஷமும் மகிழ்ச்சியும், வெளியில் தான் இருக்கின்றது என என்னி, தேடி தேடி தொலைந்து போனேன்.
அது என் வீட்டு அலமாரியில் தான் இருந்தது என்பதை அறிந்ததும் உள்ளம் மகிழ்ந்தேன், இருந்து ஒரு கவலை இவ்வளவு காலம் காணாமல் விட்டோமே என்று…. இருந்தும் பரவா இல்லை.. இப்பொழுது கண்டுகொண்டேன், புத்துயிர் பெற்றேன்.
-ச. கௌசல்யா சந்திரன்
For our regular updates follow us in social media platforms.
Facebook Twitter Instagram YouTube
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver Team📞