என்
வாழ்க்கை முன் போல் இல்லை
- முன்னுரை
- என் வாழ்க்கை
- என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்
- அவமானப்பட்ட நாட்கள்
- என் வாழ்க்கையின் திருப்புமுனை
- முடிவுரை
முன்னுரை:
வாழ்க்கை என்பது கடிகாரத்தின்
சாயலைக் கொண்டது எப்போதும் ஒரு சேர இருப்பதில்லை காயம் கண்ட சிங்கத்தின் கர்ஜணையை போல
காலம் எனக்கு செய்த கோலத்தை விவரிக்கின்றேன் இக்கட்டுரையின் வாயிலாக.
என்
வாழ்க்கை:
சுமார் 14 வருடங்களுக்கு முன் என் தாயார் எனது அப்பாவை திருமணம் செய்து கொண்டார்.
அவர் அவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணினார்.
ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது. 2 வருடம் கழித்து
நான் பிறந்தேன். நான் பிறந்த நேரம் எங்கள் வீட்டின் தேவையான பொருட்கள்
இருந்தது. ஆனால் சந்தோசம் இல்லை. எனது அம்மா
என்றோ ஒரு நாள் தன் நிலை மாறும் மற்றும் எனது அப்பாவை எதிர்த்து கேள்வி கேட்பேன் என்று
எண்ணினார். ஆனால் அது கனவாகவே போயிற்று.
என்
வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்,
எனது அப்பா சரியான குடிகாரர் தினமும் குடித்து விட்டு வந்து என் அம்மாவை
சித்ரவதை செய்வார்.
அதனால்
எந்து அம்மா விவாகரத்து பத்திரிக்கையில் கையெழுத்து போட்டார். எனக்கு அப்போது
3 வயது எனது அம்மாவிடம் “அம்மா வாங்க அப்பாவிடம்
போகலாம்” என்று கூறினேன். அதுதான் என் வாழ்க்கையில்
செய்த மிகப் பெரிய தவறு. என் வாழ்க்கையில் இருள் அதன்பிறகுதான்
சூழ்ந்துவிட்டது. இந்த பிஞ்சு மனதில் எதை விதைக்க கூடாதோ அவை
அனைத்தும் விதைத்து விட்டார் என் அப்பா. இந்த தலைப்பை தேர்ந்து
எடுத்ததற்கும் இக்கட்டுரையை நான் எழுதுவதற்கும் அவரே முழுக்காரணம்.
அவமானப்பட்ட
நாட்கள்:
எனது
சொந்தபந்தங்கள் அனைவரும் என்னை பார்த்து இது அந்த குடிகாரனின் பெண் குழந்தை தானே என்று
கேளிக் கிண்டலாக கூறுவர்.
எனக்கு
இப்போது 12 வயது இன்ன்னும் அந்த அடிதடி ஓயவில்லை. இன்னும் எனது அப்பா
நடுரோட்டில் குடித்துவிட்டு படுத்து கிடப்பார், நானும் எனது அம்மா
கஷ்டபட்டு தூக்கி வந்தோம். இவையெல்லாம் என் வாழ்க்கையில் அவமானபட்ட நாட்கள் ஆகும்.
என்
வாழ்க்கையின் திருப்புமுனை:
என் வழ்க்கையின் திருப்புமுனை
என்றால் அது 7 ஆம் வகுப்பு பள்ளி பருவம் தான் ஏனென்றால் எனது
அம்மாவினால் பணம் கட்ட இயலவில்லை அதனால் (பாவம்) பரிதாபம் பார்த்த என்னை ஊக்குவித்து தினமும் இரவில் சண்டை நடக்கும் அதனால்
எனது ஆசிரியை எனக்கு சிறப்பு வகுப்பு எடுத்தார். இன்றும் எனக்கு
எனது ஆசிரியை எனக்கு உதவுகிறார்.
அவர்கள்
என் வாழ்க்கையில் வந்தது தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.
முடிவுரை:
இறந்தகாலம் இருள் சூழ்ந்திருந்தாலும் வருங்காலம் வசந்த காலமாய் இருக்க என் படிப்பிற்கு உதவிய ஆசிரியரால் தான் என் வாழ்க்கை முன் போல் இல்லை. ஊக்குவித்த என் ஆசிரியை பிரியாவிற்கு இக்கட்டுரையை சமர்பிக்கின்றேன்.
- ம.அட்சயா
மதுரை
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞