நானும் என்
வாசிப்பும்
குறிப்புச்சட்டகம்
- முன்னுரை
- எனது முதல் வாசிப்பு
- வாசிப்பின் பயன்கள்
- வாசிப்பு பற்றிய கவிதை மற்றும் பொன்மொழி
- எனது வாசிப்பை பற்றிய அனுபவம்
- முடிவுரை
முன்னுரை
என் பெயர் கா.பிரீத்தா. நான் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறேன்.
நான் இக்கட்டுரையில் எனது வாசிப்பை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் வாசிக்கத் தொடங்கிய போது. எனக்கு அது கடினமாக
இருந்தது. அதன் பிறகு எனக்கு அது எளிமையாகவும், ஆர்வமாகவும் இருந்தது நான் எனது அனுபவத்தை இங்கு கூறுகிறேன்.
எனது முதல்
வாசிப்பு
அம்மா மளிகைப்
பொருட்கள் வாங்கிவரும் பொட்டலத் தாள்களில் உள்ள செய்திகளைப் படிப்பதில் தொடங்கியது
என்னுடைய வாசிப்பு. அதுதான் புத்தகங்களை நோக்கி என்னை நகரச்செய்தது
எம்.எஸ் உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’
என்ற நூல், நாம் அடிக்கடி என்ன நினைக்கிறோமோ என்ன
பேசிகிறோமோ அதுவாகவே மாறூகிறோம் என எண்ணங்கள் வலிமையை எடுத்துச்சொன்னது ஆகையால் நாம்
நல் எண்ணங்களை மனதில் விதைத்தால் நன்றாகவே அனைத்தும் நடக்கும். அதன் பிறகு நான் சிறுகதைகள், பழமொழிகள் படிக்கத் தொடங்கினேன்.
அதற்கு பின் இதுபோல் எனது சொந்த வார்த்தைகளால் கட்டுரை, கடிதம் எழுதுகிறேன்.
வாசிப்பின்
பயன்கள்
தகவல் பெறுவதற்கு மிக முக்கியமான ஒரு வழி வாசிப்பு ஆகும். வாசிப்பு ஒரு மனிதனை விடயம் தெரிந்த, அறிந்த அறிவு பெற்ற
மனிதனாக உருவாக்கும். தற்கால உலகத்தில் திறமையாக தொழிற்படுவதற்கு
வாசிப்பு ஒரு அடிப்படை தேவையாகும். வாசிப்புப் பழக்கமானது உங்கள்
மூளையை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருப்பதோடு ஆல்சைமர்
மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படுவதை வாசிப்புப் பழக்கமானது பெரும்பாலும்
தடுக்கின்றது. அதுமட்டுமன்றி மன அழுத்தமும் வாசிப்பதால் குறைய
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாசிப்பு பற்றிய
கவிதை மற்றும் பொன்மொழி
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ
அதுபோல மணப் பயிற்சி புத்தக வாசிப்பு என்று சிக்மண்ட் பிராய்டு கூறினானார் இது போல்
பல அறிஞர்கள், எழுத்தாளர்கள் பல கவிதைகள் மற்றும் பொன்மொழிகள்
கூறியுள்ளனர் அதில சுவாமி விவேகானந்தர் ஒரு நூலகம் ஒரு ஊரில் திறந்தால் ஒரு சிறைச்சாலை
மூடப்படும் என்று மிகவும் அற்புதமான பொன்மொழியை கூறியுள்ளார் “செய்வினையாம் சாட்சி குரலின்றி செய்தியை வேகமாய் சுயமாய் நெய்வதை இணையத்தில்
வாசிக்க மெய்யாகவே தெளிவான மகிழ்வு!”. இதுவே வாசித்தலில் இன்பம்
என்று ஒரு கவிதை ஆகும்.
எனது வாசிப்பை
பற்றிய அனுபவம்
எனக்கு முதல் முதலில் வாசிப்பது
மிகவும் கடினமாக இருந்தது. அதன் பின் மிகவும் பிடித்துபோனது.
எனது பள்ளியில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி
போன்றவையெல்லாம் நடைபெறும். ஆகையால் எனக்கு அதை படிக்க ஆசை வந்த்து.
முதலில் சிறுகதைகளை படிக்கத் தொடங்கினேன். அதன்பின்
வரலாறு படித்தேன் சிறிது சிறிதாக படித்து எனக்கும் அதுபோல் எழுத ஆர்வம் வந்த்து ஆகையால்
நான் இந்த கட்டுரையை சொந்தமாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் தங்கையுடன் நான் எனது கட்டுரையை பற்றி கூறினேன். அவளுக்கும் அதில் ஆர்வம் வந்த்து. நாங்கள் இருவரும் இது
போல் பல கட்டுரைகள், கதைகள் எழுதுவோம். இதுவே எனக்கு கிடைத்த அனுபவம்.
முடிவுரை:
மேற்கண்டவற்றில்
நான் எனது அனுவத்தையும் வாசிப்பு பழக்கத்தின் நன்மையை பற்றியும் பகிர்ந்து கொண்டேன்.
அனைவரும் வாசிப்பதன் பயனை உணர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
நாம் முடிந்தவரை இதை அனைவரையும் பின்பற்ற வைக்க வேண்டும். நம் நாடு மிகவும் புகழ்பெற்ற நாடாக மாற்ற இது நமது சிறிய முயற்சியாக அமைய வேண்டும்
என்று இக்கட்டுரையின் முடிவுரையாக எழுதுகிறேன்.
- கா. பிரீத்தா
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞