நானும் என் வாசிப்பும்:
எப்ப எனக்கு
நேரம் கிடைத்தாலும் நான் புத்தகத்தை வாசிப்பேன். எனக்கு புத்தகம்
வாசிப்பது மிகவும் பிடிக்கும். நான் முதல் தமிழை கொஞ்சம் திக்கி
வாசிப்பேன், நான் எனக்குள்ளயே ஏன் நான் திக்கி வாசிக்கிறேன் என
கேள்வி கேட்டுக் கொண்டேன் பிறகு தான் நான் புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.
வாசிக்க வாசிக்க தான் திக்காமல் வாசிக்க முடியும் என்பது மிகவும் சரி
என புரிந்து கொண்டேன். பிறகு புத்தகம் வாசிக்க எனக்கு மிகவும்
பிடித்தது வாசிக்க துவங்கினேன். முதலில் நான் கதை புத்தகத்தை
வாங்கினேன். வாங்கி வாசிக்க துவங்கினேன். அதில் உள்ள வார்த்தைகளை நான் வாசித்த பிறகு அதிலிலுள்ள அர்த்தங்களும் மிக எளிதில்
புரிந்த்து. நிறைய புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.
பிறகு நான் பள்ளியில் ரூ 10 க்கு ஓர் புத்தகம்
விருப்பம் உள்ளவர்கள் வாங்கலாம். நான் வாங்கினேன் வாங்கி அந்த
புத்தகத்தை வாசித்தேன் முழுவதாகவும் வாசித்த பிறகு கடைசி தாளில் ஒரு போட்டி இருந்தது.
அந்த போட்டி அந்த புத்தகத்தின் அடிப்படையில் கேள்விகள் இருந்தன.
நான் வாசித்ததை வைத்து அதை நான் விடை எழுதி அனுப்பினேன். அனுப்பிய பிறகு அடுத்த மாத புத்தகத்தில் எனது பெயர் வந்தது எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது. நான் அப்போது நினைத்தேன் நாம் எந்த ஒரு
எதிர்பார்ப்பும் இல்லாமல் வாசித்தது பெறும் பயனாக இருந்த்து. வெற்றிக்கு ஒரு முதல் அங்கமாக இருந்தது வாசிப்புதான். புத்தகத்தை வாசிக்க வாசிக்க தான் நமது வெற்றி நம்மை தேடி வரும். அதற்கு பின்பு தான் நான் அதிக புத்தகதை வாசிக்க துவங்கினேன். நிறைய தலைவர்கள் பற்றி வாசித்தேன், அனைத்து தலைவர்களும்
நம் இந்தியாவை காப்பாற்ற போராடி உள்ளனர் என தெரிந்தது. அனைவருக்கும்
ஒரு சில தலைவர்கள் மட்டும் தான் தெரியும் . ஆனால் எத்தனை தலைவர்கள்
நம் நாட்டை காக்க போராடினார்கள் என புத்தகத்தை வாசிக்கும்போது தான் தெரிந்தது.
வாசிப்பதில் நிறைய நன்மைகள் உள்ளன. அதற்கு பிறகு
ஒவ்வொரு புத்தகத்தை படித்தேன். புத்தகத்தை வாசிப்பது மிகவும்
நன்மை நமக்கு வாசிப்பதால் வாசிக்கும் தன்மை அதிகரிக்கும், கருத்துகள்
புரிந்து கொள்ளுதல் மற்றும் அறிவூட்டல் என பல நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
ச.கார்த்திகா
மதுரை
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞