முன்னுரை
நல்ல புத்தகங்கள் இனிய தோழமை
உணர்வை பரிசளிக்கும். கலங்கிய இதயத்தை தெளிவுபடுத்தும் ஆசானாக, ஐயம்
தீர்க்கும் வழிகாட்டியாக, தனிமைக்கு உற்ற நண்பனாக நல்ல
புத்தகங்கள் துணைநிற்கும்.
“புத்தகங்கள்
இல்லையென்றால்
சரித்திரம் மௌனமாகி விடும்
இலக்கியம் ஊமையாகி விடும் !”
நம்மை
நமக்கே அறிமுகப்படுத்தி சிந்திக்க வைத்து இதயங்களை தெளிவுபடுத்தும் ஆளுமை
புத்தகங்களுக்கு மட்டுமே சாத்தியம்.
என்னை
ஈர்த்த “விழி ஈர்ப்பு விசை”
தபூசங்கர்
இயற்றிய “விழி ஈர்ப்பு விசை” எனக்கு மிகவும் பிடித்த கவிதை
புத்தகம். கவிஞரின் எதார்த்த வார்த்தைகள் வாசகர்களின்
இதயத்தை துளைத்து ஒய்யாரமாய் அனுமதியின்றி உட்கார்ந்து கொள்கிறது.
இப்புத்தகத்தின் பக்கங்களை புரட்டும்
ஒவ்வொருவருக்கும் காதல் புரட்டிப்போடும். காதல் வாசம் அற்றவர் கூட காதலை தேடி அலைவார் என்பதில் ஆச்சரியம்
ஒன்றுமில்லை
எளிய
நடையில் இதயங்களை வளைக்கும் கவி
“சூரியன் வந்த
பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும் போதுதான்
விழிக்கிறது இந்த வீதி”
எதார்த்தமான நிகழ்வை எத்துணை
அழகாய் நிறைவேற்றுகிறார் கவிஞர் ! பொதுவாக கவி என்றால் எதுகை
மோனை சொற்கள் வந்து ஒட்டிக்கொள்ளும். நம் கவிஞருக்கு அப்படி
ஏதும் பிரத்யேக வார்த்தைகள் தேவைப்படவில்லை. இயல்பான
வார்த்தைகளிலேயே இதயங்களை கட்டி வளைத்துவிடுகிறார்.
காதல்
தேவதைகளுக்கான பரிசு
காதலை வெளிப்படுத்த உகந்த பரிசு பெட்டகம் இந்த “விழி ஈர்ப்பு
விசை” வாசிக்கும் அனைவருக்கும் காதல் வெள்ளம் கரைபுரண்டோடும்.
“தொலைபேசியில்
எல்லாம்
நீ எனக்கு முத்தம்
தராதே
அது உன் முத்தத்தை
எடுத்துக்கொண்டு
வெறும் சத்தத்தை
மட்டுமே எனக்கு தருகிறது
!”
காதலில் திளைத்து இதயங்களை தொலைத்து கனவுலகில்
மிதந்து இன்பக்கடலில் மூழ்கிட விழி ஈர்ப்பு விசையை நோக்கி பயணியுங்கள்.
காதல்
யுத்தம்
காதலில் வெற்றிக்கனியை ருசிப்பது காதலியா இல்லை
கவிதைகளா என்ற பனிப்போரில் நம்மை திக்குமுக்காட வைக்கிறார் நம் கவிஞர்.
“உன்னை ஏன்
இப்படி காதலித்து தொலைக்கிறேன்
அடிக்கிற அம்மாவின்
கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை
மாதிரி !”
முடிவுரை
முக்காலம்
பறைசாற்ற நம் தமிழ் அன்னை கொடுத்த பரிசு மொழி. எல்லாத் துறைகளிலும் சிறந்த
வல்லுனர்கள் அவர்களின் அனுபவங்களை பதிவு செய்து வருங்கால சமுதாயத்தின்
வழிகாட்டியாக விளங்க புத்தகங்கள் வழிவகுக்கின்றன.
“நூலகத்தில் என்றும் சரிந்தே
கிடைக்கிற புத்தகங்கள் தான்,
எனினும் அவை வாழ்க்கையை
வென்று நிமிர்ந்து நின்றவர்களின்
வரலாற்று வெற்றிக்கொடி !”
நம் பயணத்தின்போது உங்களுக்கு விருப்பமான
ஏதேனும் ஒரு புத்தகத்தை சுமந்து செல்லுங்கள் வழிப்பயணம் வாழ்க்கை பயணமும் எளிதாய்
அமைந்திடும்
வாழ்க
தமிழ் !!!
வளர்க
தமிழ் !!!
-- பா.சூர்யா
For our regular
updates follow us in social media platforms.
தங்கள் வருகைக்கு நன்றி🙏
-Receiver
Team📞