நானும் என் வாசிப்பும் - ஆ. பூமாதேவி


 


நானும் என் வாசிப்பும்

 

    நான் பூமாதேவி.புதுச்சேரியில் வசிக்கிறேன்.இல்லத்தரசியாக இருக்கிறேன்என் வாசிப்பு அனுபவம் அம்புலி மாமா கதைப்பூங்கா கதைக்கொத்து கதைமஞ்சரி என்பதில் ஆரம்பமானது.கதைப்பூங்கா போன்ற புத்தகங்கள் பள்ளியில் படிக்கும் போது புத்தகங்களோடு வழிகாட்டும் புத்தகமாக இருந்தது.விளையாட்டாக படிப்போம்.

    நான் வளர்ந்தது பாட்டி வீட்டில்….மதுரையில்.நாங்கள் எட்டு பத்து பேர் ஒரே வீட்டில் வாழ்ந்தோம்.எங்களுக்கு பெரும் பொழுது போக்கு புத்தகங்களே.நூலகத்தில் மெம்பர்சிப் எல்லோருக்கும் உண்டு.வீட்டிற்கே மொபைல் நூலகம் வரும்.அதிலும் புத்தகம் எடுப்போம்.

    சர்க்குலேசனில் ஒரு அம்மா தினம் இரண்டு புத்தகங்கள் கொடுத்துச் செல்வார்.வார மாத இதழ்கள் நாவல்கள் அம்புலிமாமா போன்ற புத்தகங்களை அவரிடம் வாங்கிப் படிப்போம்.தினம் புத்தகத்தை மாற்றிக் கொள்ளலாம்.

    இதுவும் போதாதென்று பக்திப் புத்தகங்கள்  பாட சம்பந்தமான புத்தகங்களை எங்கே கண்டாலும் வாங்கிடுவோம்.பழைய புத்தகக் கடைகளில் நிறைய வாங்கி படித்திருக்கிறோம்.

    நான் பத்தாவது படிக்கும் போது கிராமத்திற்கு என் வீட்டிற்கே சென்று விட்டேன்.அதன் பிறகு பாடப்புத்தகங்கள் தவிர வேறு படிக்க வாய்ப்பில்லை.கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் நுழைந்ததும் சிறுவயது ஞாபகம் வந்து புத்தகங்களை ஆசையாக புரட்டி புரட்டிப் பார்ப்பேன்.ஆனால் படிக்க அவகாசமும் இல்லைகல்லூரிக் கொண்டாட்டங்களில் புத்தகம் படிக்கும் ஆவலும் குறைந்தது.




    திருமணமாகி வெளி மாநிலம் சென்றேன்.நூலகத்தில் மெம்பர் ஆனாலும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கவில்லை.ஆனால் சில வார இதழ்கள் நாவல்களை வாங்கி படித்தேன்.குறிப்பாக பாலகுமாரன் நாவல்கள் அவர் நடித்தார்.எனக்கும் பிடித்திருந்தது.

    பிள்ளைகள் பிறந்தனர்அவர்களின் வளர்ப்பில் நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தினேன்.அவர்களும் மிக வேகமாக படிக்கும் பழக்கத்திற்கு வந்தனர்.பிறகென்ன போகும் இடமெல்லாம் லைப்ரரியில் மெம்பர்சிப் வாங்கிக் கொண்டிருந்தோம்.புக் எக்ஸ்பிசனிலும் நிறைய வாங்கினோம்.

    புத்தக அலமாரி வீட்டிற்கு வருகை தந்தது.நிறைய நிறைய புத்தகங்கள் சேர்ந்தது.பிள்ளைகள் தன் படிப்பறிவைக் கொண்டு பேச்சு எழுத்து வினாடி வினா கட்டுரை அறிவியல் கண்காட்சி என்று கலந்து கொண்டு பரிசுகளை வாங்கிக் குவித்தார்கள்.அதிலும் புத்தகங்களே பரிசாகக் கிடைத்தது.

    எங்களுக்கு இருக்கும் ஒரே வருத்தம் தவிர்க்கவே முடியாமல் இடம் மாறும் போது சில புத்தகங்களை எடைக்கோ பழைய புத்தகக் கடையிலோ போட்டு வர வேண்டிய சூழ்நிலை.முடிந்தவரை பெட்டி பெட்டியாக கொண்டு வந்தாலும் சில புத்தகங்களை இப்படி இழந்திருக்கிறோம்.

    இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என்னை எங்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டால் என் வாசிப்பு அனுபவத்தை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்பதால்.

    பிள்ளைகள் வளர்ந்து பள்ளி கல்லூரி என்று சென்ற பிறகு நிறைய  நேரம் கிடைத்தது.நூலகத்திற்கு சென்றும் படித்தேன்.வீட்டிற்கும் எடுத்து வந்தேன்.பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக கண்காட்சியில் பிள்ளைகளுக்காகவும் எனக்காகவும் நான் வாங்கிய புத்தகம் அக்னிச் சிறகுகள்.அந்தப் புத்தகம் அப்போது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது பல கட்டுரைப் போட்டிகளுக்கும் பேச்சுப் போட்டிகளுக்கும் பாடு பொருளாக உதவியது.ஓய்வு நேரத்தில் நான் பலமுறை இந்தப் புத்தகத்தை படித்தேன்.ஒரு முறை கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள.



ஒரு முறை அவரின் முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ளஒரு முறை வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை உணர்ந்து கொள்ளமற்றொரு முறை சாதி மத வேறுபாடற்று வாழ்வது எப்படி என்பதை கலாம் மற்றும் அவரின் அப்பா நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாக அறிந்து கொள்ள.

விண்ணுலகில் அறிவியலின் முன்னேற்றம் குறித்து புரியவும் மற்றும் ஒரு முறை படித்தேன்எளிமையான வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதற்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டியது.வழிபாடு பக்தி பண்பாடு குறித்தும் விளக்கியது.

இப்படி ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுப்புது அனுபவங்களைத் தந்து கொண்டிருக்கும் அக்னிச் சிறகுகள்என்ற புத்தகத்தை இப்போதும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.இதோ இந்த நானும் என் வாசிப்பும்என்ற கட்டுரைப் போட்டிக்காக.

இந்தப் புத்தகத்தைப் படித்த அனுபவத்தைக் கொண்டு ஒரு போட்டிக்காக இந்தக் கவிதையை எழுதினேன்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

 

ஆகலாம் அப்துல்கலாம்

மனிதருள் மாணிக்கமே

வாராது வந்த மாமணியே!

சொல்லித் தெரிந்தோம்

கனவு காண!

 

பார்த்தே பழகினோம்

உங்களைப்போல் வாழ!

 

பெற்றவர்களை மதி;

ஆசிரியர்களைப் போற்று;

பிறந்த மண்ணைக் கொண்டாடு;

தாய்மொழியை நேசி;

ஆண்டவனை நம்பு;

ஆகலாம் நீயும் அப்துல்கலாம்!

 

மனித நேயம் பெற்றிடு;

எதிலும் எளிமை கொண்டிடு;

குழந்தை போல சிரித்திடு;

கூடி நீயும் மகிழ்ந்திடு;

ஆகலாம் நீயும் அப்துல்கலாம்!

 

விஞ்ஞானமும் புரிந்திடு;

மெய்ஞ்ஞானமும் உணர்ந்திடு;

உழைப்பால் உயர்ந்திடு;

உயரிய கனவால் பறந்திடு;

ஆகலாம் நீயும் அப்துல்கலாம்!

 

உன்னத லட்சியம் உனக்கிருந்தால்

உண்மையான உழைப்பிருந்தால்

ஆகலாம் நீயும் அப்துல்கலாம்!

 

அப்துல்கலாம் அவரின்

கனவை மெய்யாக்கு;

உரையை உயிராக்கு;

மதத்தால் பிரியாதே

மனிதமாய் ஒன்றுபடு ;

ஆகலாம் நீயும் அப்துல்கலாம்!

 

அக்னிச் சிறகுகள்எங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஒளி தந்து எங்களுக்கு வழி காட்டுகிறது.

நானும் என் வாசிப்பும்என்ற கட்டுரைக்கு இந்தப் புத்தகத்தைத் தவிர வேறு பல பல   புத்தகங்களையும்  சொல்ல முடியும் என்றாலும் ,நித்தம் ஒரு கனவினைத் தந்து என்னைச் செதுக்கும் அறிவியல் புத்தகம் ,ஆன்மிக வழிகாட்டி,வரலாற்று நூல்,தன் வரலாற்றுப் பொக்கிஷம்,சாமானியனின் கதைஅக்னிச் சிறகுகள்என்ற இந்த புத்தகமே என்பதை எடுத்துக் காட்டி என் இந்த வாய்ப்பிற்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி.வணக்கம்.

 - ஆ. பூமாதேவி


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post