என் வாழ்க்கை முன் போல் இல்லை
பொருளடக்கம்
முன்னுரை
என்
திருமணத்திற்கு முன்
என்
திருமணத்திற்கு பின்
முடிவுரை
முன்னுரை:
மானுடராய் பிறந்த ஒவ்வொருவர்
வாழ்க்கையையும் மாற்றும் ஒவ்வொரு திருப்பு முனை உண்டு . என் வாழ்விலும் அப்படி
பலதரப்பட்ட திருப்புமுனைகள் உண்டு ஏனெனில் நான் பெண் என்பதினால்.. என் வாழ்வில்
என்னை பெரியதாய் பாதித்த என் வாழ்வை மாற்றிய பல திருப்புமுனைகளில் ஒன்று என்
திருமணம்.. அதனை பற்றி சுருக்கமாக இக்கட்டுரையில் விவரிக்க போகிறேன்..
என்
திருமணத்திற்கு முன்:
என் இதழ்கள் என்றுமே
புன்னகைத்து கொண்டிருந்தது .. எந்தவொரு பொறுப்பு சுமையும் , அதிகார அடக்கமும் என்னை ஆட்கொள்ளவில்லை. இயல்பை
மீறி வாழ்வு இயங்கவில்லை.. இதயத்தில் எந்த சிந்தனையும் கனத்து மென்னவில்லை. என்
இளமைக்கு கொஞ்சம் , திறமைக்கு
கொஞ்சம் என இளவட்ட இளைஞர்கள் வயது வரம்பின்றி சுற்றி கொண்டிருந்த சுகம்.
எதிர்காலம் ஒன்றென இல்லாதவாறு கல கலவென சிரித்து பேசி கண்ட இடமெல்லாம் கண்டு கழித்த
கனா காலம் என் திருமணத்திற்கு முந்தைய காலம்..
என்
திருமணத்திற்கு பின்:
என்னை இரசிக்கும் இரசிகர்கள்
கூட்டத்தோடு நண்பர்கள் நண்பிகள் கூட்டமும் காணமாலே அவிழ்ந்து போனது. இரகசியங்கள்
இல்லாது அனைத்தும் வெளிப்படையானது. "அழகி" என்றழைத்த வாய் போய்
"ஆண்ட்டி" என்றழைக்கும் வாயால் வயது கூடி போனதோ அழகு அழிந்து போனதோ என்ற
மன அழுத்தம் தொற்றி கொண்டது.. என்னை நான் முற்றிலும் இழந்துவிட்ட உண்மை
புரிந்தது.. எனக்கென வாழ்தல் மறந்து போயிருந்தது.. பிள்ளைபேறால் கச்சிதமான
உடலமைப்பு பூசி உப்பலாகி பிடித்த உணவை உண்ணாது கட்டுப்படுத்தி கொள்ள மனம் இறுகி
போனது.. நான்கு சுவறே நாள்தோறும் சுற்றுலா தளம் என்றாகிவிட்டது.. செய்யாத
குற்றங்களுக்கு பலியாக்கபடல்.., பழிச்சொல்
கேளல், பணிச்சுமை கூடுதல்,
எதிர்காலம் பற்றின பயம் என
வாழ்க்கை சற்றே நரகமானது. பிடித்த பணிக்கு போக முடியாது, கிடைத்த பணிக்கு குத்தகை விட்டு இரவு நெடுநேர
விழிப்பும் , அதிகாலை
சீக்கிரம் எழுதலும் தூக்கத்திற்கு விடுப்பு தர பழகிப்போனது.. வாழ்க்கை அவசர
அவசரமாக நகர்த்தப்பட்டது.. " என் வாழ்க்கை முன் போல் " அல்லாது
திருமணத்திற்கு பின் சற்று கடினமாகி தான் போனது..
முடிவுரை :