என் வாழ்க்கை முன்போல் இல்லை - ஜோ. ஜெயராஜ்


 

என் வாழ்க்கை முன்போல் இல்லை


அருமையான தலைப்பு என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட செயலே பல அனுபவங்கள் மட்டும்தான் கற்றுக் கொடுத்திருக்கின்றது. அதை இக்கட்டுரையிலே காணலாம்.

இது கட்டுரை மட்டுமல்ல என். வாழ்க்கை கதை என்றே கூறலாம் சித்திரையில் பிறந்தாலே சித்திரை அப்பன் தெருவிலே என்பார்கள். நான் பிறந்த ராசியோ என்னவோ ஆறு மாதக் குழந்தையிலே என் தாயைக் கொடுமைபடுத்தி விட்டு என்னையும் என் சகோதரியையும் தவிக்கவிட்டு வேறொரு திருமணம் செய்துவிட்டு சென்றார் என் தந்தை.
 
பத்தாம் வகுப்பு நான் முடித்தவுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தபோது என்னை தேடிவர நான் திட்டிவிரட்டிவிட்டேன். ஏதோ சுமாராக படித்தேன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த என்னை என் தாய் விருப்பத்திற்கேற்ப ஆசிரிய படிப்பிற்காக அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை விடுமுறை நாளில் என் தாய் விருப்பத்திற்கேற்ப அச்சக வேலைக்கு சென்றேன் பணம் பெறவில்லை.

என் நேரம் கல்லூரி தாமதமாக திறந்ததால் (IDC) இயற்பியல் இளங்கலை பட்டம் படித்தேன். படித்த மூன்று ஆண்டுகளில் தனித்தேர்வு பன்னிரண்டாம் வகுப்பு எழுதினேன் ஆசிரிய பயிற்சிக்காக முயற்சி  செய்தேன். கிடைக்கவில்லை. மேலும் மூன்று ஆண்டாக காவல் துறை வேலைக்கும் தீயனைப்பு வேலைக்கும் முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. முதுகலை பட்டம் பெற்றேன். ஒரு வருட கணிப்பொறி டிப்ளமோ பயின்றேன்.
 




தெருவில் பழகிய அண்ணண் பேச்சைக் கேட்டு செய்துகாட்டல் கருவி கொண்டு ஒவ்வொரு ஊராக ஒவ்வொரு கல்லூரிக்கு சென்றேன். சென்று வர பணம் மட்டும் அளித்தார்கள். ஊதியம் பெறவில்லை. நான் கடினப்படுவதை நினைத்து என் தாய்மாமா எனக்காக ஒரு வேலைக்கு பணம் கொடுக்க அவன் ஏமாற்றி ஓடிவிட்டான். அவர் கூறிய இடத்திற்கு சென்று ஒரு நாள் மாதம் கழித்தே தெரிந்தது.
 
ஒரு சாதாரண கல்லூரியில் வேலை பார்த்தேன் குறைந்த ஊதியத்தில். வருமானம் அதிகரிக்க கல்லூரியை விட்டு விலகினேன் ஏழு வருடம் முயற்சி செய்து எட்டாவது வருடம்  நுழைவு தேர்வில் வெற்றி பெற்று ஆசிரிய பயிற்சி பயின்று வெற்றி
பெற்றேன்.

நான் படிக்கும் போது 21 கல்லூரி. படித்து முடித்தவுடன் 769 கல்லூரி. அரசும் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஒரு திருப்புமுனை  எனக்கு.

நான் படித்து முடித்த பிறகு நுழைவுத்தேர்வு இல்லாமல் அரசு பல கல்வியியல் கல்லூரியை தொடங்கியது. நீண்ட நாள் கனவு பலித்தது. பட்டம் முடித்தேன். நல்ல மதிப்பெண் பெற்றேன்.வேலைவாய்ப்புக்கு ஒரு போராட்டம் அமைந்தது.  ஒரு வருடம் ஒரு பள்ளியில் வேலை பார்த்தேன். 

குறைந்த ஊதியம் மேலும் பட்ட மேற்படிப்பு படிக்க பழைய கல்லூரி ஆசிரியர் அழைக்க மீண்டும் ஆசிரிய படிப்பிலே முதுகலையில் நன்மதிப்பு பெற்று கல்லூரி பேராசிரியரே தேர்வு செய்து ஒரு கல்லூரியில் என்னை ஆசிரியப் பயிற்றுனராக பணியமர்த்தினார். நான் படித்து முடித்தவுடன்  M. Ed கல்லூரி 80 ஆக மாறியது.. படிக்கும்போது எட்டு கல்லூரி. தந்தை காலமானார். நான் பார்க்க  செல்லவில்லை. ஒரு தந்தையாக
நான் எப்படி வாழ வேண்டும் என கற்றுக் கொண்டேன்.
 
வேலை பார்த்து கொண்டே தொலைதூரக்கல்வியில் உளவியல் நூலக பட்ட மேற்படிப்பு மற்றும் சமூகவியல் என பட்டத்துடன் ஆறு ஆண்டு பணி செய்தேன் ஆசிரிய பயிற்றுனராக. அடுத்து வந்த தாளாளர் அதிக ஊதியம் காரணமாக மற்றும் வெளியூர் என்பதால் எளிதாக வேறு இடத்தில் வேலை பார்க்க அனுப்பி விடவே சொந்த ஊருக்கு வந்தேன். முப்பத்தைந்து வயதை கடந்தவுடன் என்்தாய்்எனக்கு திருமணம் செய்து வைத்தார்.கல்லூரி வாய்ப்பு கிடைக்கவில்லை பதின்ம பள்ளி வாய்ப்பு கிடைக்க நான்கு ஆண்டுகள் வேலை பார்த்தேன். திருப்தியாக பாடம் எடுக்க முடியவில்லை. பேப்பர் திருத்துவதும் அதிக தேர்வை கவனிப்பதாக மட்டுமே அமைந்தது. உடம்பு ஒத்துழைக்க வில்லை. 

இரு குழந்தைக்கு தந்தை ஆனேன்.  என் தாய்மாமாவை இழந்தேன். குழந்தை பள்ளி செல்லும் வயதில் ஊரெங்கும் தொற்று நோய் பரவல். இந்த நிலையில் வேலையை இழந்தேன். தனியாரிடத்தில்  வேலை செய்தால் இதுதான் விதி என்பது. பணப்புழக்கம் இல்லை அரசும் ஆதரிக்கவில்லை. என்னை சிறுவயது முதல் வளர்த்த தாத்தாவை இழந்தேன். 

இந்த நிலையில் நண்பன் பேச்சைக்கேட்டு ஆசிரியத்தேர்விற்கு பயின்றேன் ஒரு மதிப்பெண்ணில் வேலை கிடைக்கவில்லை. அவன் ஆதரவு தர அவனுடைய வீட்டில் டியூசன் எடுத்து தொற்று காலத்தில் குடும்பத்தை ஓட்டினேன். அவனாலும் முடியாத காரணம் டியூசன் நிறுத்தப்படவே PF பணம் பெற்று குடும்பத்தை ஓட்டி வருகிறேன். எப்போது பள்ளி கல்லூரி திறக்குமா என ஆசையில் ஏங்கி நிற்கிறேன். அடுத்த மாதமாவது பள்ளி கல்லூரி திறக்குமா என நாளுக்கு நாள் செய்தியைதான் கேட்கிறேன். என்னை பிடித்தது தரித்திரமா இல்லை சரித்திரமா.

எந்த தொழில் கொடுத்தாலும் செய்வேன். இனி ஆசிரிய தொழில் வேண்டாம் என்ற சிந்தனை மேலோங்கி வருகிறது. வயதும் நாற்பதை கடக்கிறது. அதிக பட்டங்கள் அதிக ஆபத்து ஏற்படும் என உணர்ந்து விட்டேன். சான்றிதழ்கள் நூறுக்கு மேல் என்ன பயன். வேலைவாய்ப்பு அலுவலகம் இருந்து என்னை போன்று படித்த ஆசிரிய பயிற்றுநர்களுக்கு என்ன பயன் ஆராய்ச்சி பட்டத்திற்கு லட்சக் கணக்கில் கேட்கிறார்கள் பல்கலைகழகத்தில். ஊர் ஊராக சென்று வழிகாட்டிக்காக பிச்சை எடுத்தும் கிடைப்பதில்லை ( P. hd) 

இந்த படிப்பு படித்தால் வேலைகிடைக்காதா என்று நினைத்து படித்து 11பட்டங்களை படித்துவிட்டேன். அரசு குறிப்பிட்ட தேதிக்குள் பிறக்க வேண்டும் இல்லை எனில் 5ஆண்டு10 ஆண்டு அனுபவம் கேட்கிறது.  அதற்குள் வயது முடிவடைந்து விடுகிறது. இதை யார் கேட்பார்கள். அரசு ஆசிரியர் கூட தனியார் ஆசிரியரை பார்த்தால் ஏளனம் தான். 

மாதக்கணக்கில் தொற்று நோய்க்கு தனியார் ஆசிரியர் பிச்சை போன்று அரை ஊதியத்திற்கு நிற்கும்போது இதே நிலையை அரசு ஆசிரியருக்கும் கல்லூரி பேராசிரியர் முதல்வருக்கு இக்கால கட்டத்தில் கொடுத்துப்பாருங்கள் போராட்டம் வெடிக்கும். ஆசிரியருக்குள் ஒற்றுமை இருந்தால் தனியாரிடம் வேலை பார்ப்பவர்கள் அவமானம் பெற வேண்டிய அவசியம் இல்லை அரசு ஓரவஞ்சனம் காட்டுவது சரிதானா சரியான நேரத்தில் அரசும் கவிழ்த்து விடுகிறது. இந்த நிலையில் தனியார் ஆசிரிய நிலையையும் வேலையில்லா பட்டதாரி நிலையையும் தமிழ்நாடு அரசு அறியுமா. இப்போது தனியார் பள்ளியில் இணையதள கற்றல் பாடத்திற்கு ஆசிரியருக்கு அரை மாத ஊதியம். வேலையில்லா ஆசிரியருக்கு எது ஊதியம். என் வாழ்க்கை முன்போல் இல்லை. 

-ஜோ. ஜெயராஜ் 

For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


Previous Post Next Post