ரப்பர் வளையல்கள் - புத்தக வாசிப்பனுபவம்



 


அன்புள்ள சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களுக்கு,

                                                                                                          உங்கள் வாசகன் பிரதாப் எழுதுவது, முதலில் தங்கள் புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தமைக்காக மிக்க நன்றி. எனது விடுதியில் புத்தகம் வந்து ஒரு மாதம் மேலாக எனக்கு தெரியபடுத்தவில்லை. நீங்கள் அனுப்பிய செய்தி மூலம் தான் தாங்கள் புத்தகம் அனுப்பியது தெரியவந்தது. ஒரு மாத காலம் வீண் செய்ததாக உணர்ந்தேன்.


                            "ரப்பர் வளையல்கள்" என்ற முதல் சிறுகதையே நம்மோடு வாழ்க்கையை ஒப்புமை படுத்துவதாக இருந்தது. ஏழையிடம் மட்டும் பாயும் சட்டம் வேகமாக இருக்கும் என்ற கருவை அருமையாக எழுதியிருந்தீர்கள்.


                            "மாற்று கொலை" என்ற சிறுகதை சற்று மனக்குமுறல்களை ஏற்படுத்தியது. நவீன காலத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் தொடர்வது மனதிற்கு அவ்வப்போது வலியை உண்டுசெய்கிறது.


                            "செம்மலர்" எனக்கு பிடித்த சிறுகதையில் இதுவும் ஒன்று அகம் மலரும் செம்மலர் போன்ற பெண்களை முகத்தோற்றம் கொண்டு சிறுமை படுத்தாமல் இருக்க வேண்டுமென நானும் என் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். செம்மலர் போன்ற பெண்களை காணுகிறேன் இன்றும்.


                            "உணர்வுகள்" தற்கால உறவுகள், உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அது தவிர வேறு சில (பணம், செல்வாக்கு, பகட்டு வாழ்க்கை) அற்ப காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, ஆனால் அவர்கள் அடையும் ஏமாற்றம் போன்றவற்றை தொகுத்த முறை நன்று.


                        "வென்னி" கரிகாலன் என்ற மாமன்னனின் போர்கலையை பற்றிய சிறுகதை மிகவும் அருமை.


                        "கொடுக்காபுளி" - இப்படி பலர் நம் வாழ்வில் கண்டிருப்போம் அவர்களை துச்சமாக எண்ணியிருப்போம். நன்மை பெறும்போது அவர்களை அரவணைக்காமல் விடுத்தால். தீமை வரும்போது அவர்கள் நம்மை  அரவணைக்க மறப்பர். எல்லோருக்கும் வாய்ப்புவரும் அதை அவர்கள் முடிவெடுக்க நாம்தான் தூண்டுகிறோம். கொடுக்காபுளி போன்ற மக்களிடம் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.😉


                        "பணமதிப்பிழப்பு" -  பண மதிப்பிழப்பை மிக சரியாக  கோர்த்து இந்த சிறுகதை அமைத்தது மிக அருமை.


                        "அலங்கரிக்கப்பட்ட பொய்கள்" - என்ற சிறுகதைகள் நம் வாழ்வில் ஒரு முறையேனும் நடந்திருக்கும்.


                "தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்" என்ற தலைப்பில் இருந்த சிறுகதை மிக நகைச்சுவையாக அதே நேரம் விழிப்புணர்வு கதையாக இருந்தது.


                "எச்சில்"- தன் வாயால் தவளை கெடும் என்ற பழமொழிக்கு பலியானவன் சுரேஷ்.


                "மேய்ப்பர்"- என்ற சிறுகதையை படிக்கும்போது இப்படி ஒரு அதிசியம் சகோதரி அனிதா வாழ்விலும் நடந்திருக்க கூடாத என்ற ஏக்கம் என் மனதில் ஏற்பட்டது. கல்வி எவ்வளவு முக்கியம் என்ற கருத்தை மிக நேர்த்தியாக கையாண்டது அருமை.


                    "அட்ரஸ் பாலாஜி"- இவரை போன்ற பலர் இன்றும் தன் வாழ்வின் திசையை மாற்றிக் கொண்டுள்ளனர். இருப்பினும் ஆறாத வடுவாக என்றும் அவர்கள் மனதில் இருக்கும்.


                    "லாக்டவுன் சமையல்"-  ஆகா தங்கள் நகைச்சுவை சார்ந்த கதைகள் மிக அருமை. நீங்கள் இவ்வித கதைகளில் கெட்டிக்காரர் போல் தோன்றியது. இந்த கதையை போன்று பலமுறை நடந்தாலும் தாங்கள் எழுதியதை படிக்கும்போது புதிதாக வருவது போல் ஒருவித சிரிப்போடு இந்த கதையை நிறைவு செய்தேன்.


                    "பெருமூச்சு"-  கோவிட் காலத்தில் நடப்பது போன்ற கதைக்களம் இப்படியாக நமது பாடகர் SPBயும் திரும்பி வந்திருக்க கூடாதா என மனதில் தோன்றியது.


                "இ.யெம்.ஐ" - இந்த டெக்னிக் எனக்கு புதுமையாக இருந்தது. நல்ல முயற்சி ஆன்லைன் ரம்மி. இந்த கதையை படிக்கையில் வாழ்வில் வென்றவரும் தோற்குமிடம் சூது என தெரிகிறது.


                "கிணத்துக்கடவு"- மனதை உலுக்கிய கதை மற்றவர்களுக்கு எப்படியோ, விவசாயம் செய்த என்னை போன்ற நபருக்கு தெரியும். ஒரு காய், கனி உருவாக எத்தனை காலம், எவ்வளவு உழைப்பு தேவை என்றும் வெறும் பணத்தை மட்டும் கொடுத்து அந்த பொருளை வீணாக்குவது அதை அந்த விவசாயி கண்முன் நடக்கவில்லை என்பதே பெரும் நிம்மதி.


                "தாரா"- வாழ்க்கை திசை மாறிய பலர் எடுக்கும் முடிவுகள் தற்காலிக (இன்பத்திற்காக) தேவைக்காக, நிரந்தர வாழ்வை தொலைத்தவர்கள்.


                தாங்கள் எழுதிய அனைத்து பகுதிகளை சிறுகதைகளை முழுவதும் படித்தேன். உங்கள் எழுத்துக்கள் மிகவும் ஈர்த்தது. நிச்சயம் நீங்கள் இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும். சிறு சிறு அச்சு பிழைகள் இருந்ததை தவிற. மற்ற அனைத்தும் மிகவும் அருமை.

                நகைச்சுவை எளிமையான சொற்கோவைகளை அருமையாக கையாண்டுள்ளீர்கள். தங்களின் இந்த புத்தகம் பல வாசகர்களிடம் சேர வேண்டும் என்னால் முடிந்த உதவியை தங்களுக்கு செய்கிறேன் நிச்சயம் எனது நண்பர்களுக்கு இந்த பரிந்துரைப்பேன்.

எனக்கு அன்பளிப்பாக அளித்தமைக்கு மிக்க நன்றி

மென்மேலும் எழுத வாழ்த்துகள்!!!

எழுத்தாளர் சிவசங்கர் ஜெகதீசன் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

புத்தகத்தை வாசிக்க

என்றும் அன்புடன் 

பிரதாப் மோகன்

-Receiver Team

 வாழ்க வளமுடன்       

                

    

                

Previous Post Next Post