வணக்கம் வாசிப்பாளர்களே!!!
இன்று நமது ரிசிவர் குழுமம் வாசித்த இந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது? என்ற புத்தகத்தின் வாசிப்பனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறோம்.
எழுத்தாளர் குகன் எழுதிய இந்த புத்தகம் நமது இந்திய நாட்டின் உளவுத்துறையான ரா அமைப்பு பற்றியும், ஐ.பி க்கும் ரா விற்க்கும் இடையேயான நடந்த பங்காளி சண்டைகளையும். நாட்டின் பல கலவரங்களுக்கும், தீவிராத செயல்களுக்கு பின்னால் இருந்த சதிகளை களைய ரா அமைப்பு செயல்பட்டதை பற்றிய தொகுப்பு தான் இந்த புத்தகம்.
உளவாளி என்பவன் திரைப்படத்தில் காண்பிப்பது போல் கோட் ஷூட் அணிந்துக் கொண்டு தன் அடையாளத்தை வெளிப்படையாக காண்பித்து கொள்வது போல் நிஜத்தில் இருப்பதில்லை. மக்களோடு மக்களாக கலந்து தனது நாட்டிற்கு எதிராக செயல்படும் சதிகளை கண்டறிந்து அதை நடக்காமல் தடுக்க வைப்பதே இந்த ரா அமைப்பின் வேலை.
கவுன்ட்டர் இன்டலிஜன்ஸ், ஹனி ட்ராப், காலிஸ்தான் போராளி ஒழிப்பு என பல அரிய தகவல்களை உள்ளடக்கிய இந்த புத்தகம் வாசிப்பவரின் மன ஒட்டத்தில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்திகிறது. பங்களாதேஷ் என்ற நாடு உருவாக பெரும் பங்கு நமது ரா அமைப்புக்கு உண்டு. வழக்கமாக கட்டுரை தொகுப்பு புத்தகம் மாதிரி அல்லாமல் உன்மை கதைகளின் வழியே பல தகவல்களை அள்ளி தெளித்துள்ளார் ஆசிரியர் குகன் அவர்கள்.
இந்த புத்தகத்தின் வழியே பல நாடுகளுக்கும் அவர்களின் உளவுத்துறை சார்ந்த இடங்களுக்கும் இலவசமாக பயணித்துவிட்டேன் ஆசிரியரின் உதவியால். உளவுத்துறை வரலாறு, அதன் வெற்றி தோல்வி பற்றிய தரவுகளை தொகுத்து வழங்கியுள்ளார். மாறுபட்ட வாசிப்பனுவத்தை இந்த புத்தகம் எனக்கு வழங்கியது. உங்களுக்கும் வழங்கும் என நம்புகிறோம்.
-ரிசிவர் குழு