TNPSC Current Affairs in Tamil 21-11-2022


TNPSC Current Affairs in Tamil




1.ஐ.நா. பருவநிலை தீர்மானத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 27-வது மாநாடு எகிப்தின் ஷ்ரம் -அல் -ஷேக் நகரில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெறுகிறது.மாநாட்டின் இறுதி அறிக்கை தயாரிப்பதற்கான கூட்டம் சனிகிழமை பிற்பகல் தொடங்கி    ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற   கூட்டத்தில் மாநாட்டின் இறுதி அறிக்கை ஒப்புதல் அளிக்கப்பட்டது .

அதில் ,பருவநிலை இழப்பீட்டு  நிதியை உருவாக்குவதற்கான உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன .

இது பருவநிலை மற்றைத்தை எதிர்கொள்வதில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

வரலாற்றுரீதியில் தொழில்புரட்சிக்குக் காரணமான வளர்ச்சியடைந்த நாடுகள் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளன.ஆனால் ,அதிகப்படியான கரியமில வாயுவால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தீவு நாடுகளையும் ,குறைந்த வருமானம் கொண்ட நாடுகளையும் அதிக அளவில் பாதித்து வருகிறது.

வளர்ந்து வரும் நாடுகளும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் பருவநிலை மாற்றத்தினால் சந்தித்துவரும் பேரிழப்பிற்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும் பருவநிலை இழப்பிட்டுநிதியை உருவாக்குவதற்கும் ஐ .நா .பருவநிலை மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளிடமிருந்து நிதியைப் பெற்று பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றத் தடுப்பு திட்டங்களுக்கு அந்த நிதி பயன்படுத்த உள்ளது.


2.கத்தாரில் உள்ள அல்  பேத் மைதானத்தில் ஞாற்றுக்கிழமை நடைப்பெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது இதில் 32-நாடுகள் இந்தப் போட்டியில் வரும் டிசம்பர் 18 வரைநடைபெற உள்ளது.


3.புதிய தேர்தல் ஆணையராக ,ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் குடியரசு தலைவரால் நியமிக்கப்ட்டுள்ளார்.இவர் பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டடின்  ஐஏஎஸ் அதிகாரி ஆவர் .மத்தியஅரசு  செயலராகவும் பணியாற்றி உள்ளார் .மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியில் இருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


4.அருணாச்சலப்பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.நாட்டின் புதிய அணுகுமுறைக்கு இது உதாரணம் என பெருமிதம்.இதற்கு டோனிபோல விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.


5.ஆண்டுதோறும் நவம்பர் -15 தேதி முதல் 21-ஆம் தேதி வரை பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்பு வரமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது.கடந்த ஆண்டைப் பொருத்த வரை சராசரி அளைவைவிட (2.5 கிலோ முதல் 3.4கிலோ வரை )குறைவான எடையுடன் பிறகும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.குறைப் பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறகும் குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளின் செயல் திறன் குறையும் என்றும் ரத்த நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.



-Bakya
Receiver Team
Previous Post Next Post