1.புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் ,8சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சனிக்கிழமை (நவ 26) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவன் ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.புவிக் கண்கணிப்புக்கான இஓஎஸ் -06(ஓஸோன்சாட் -3) என்ற நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக உள்ளது இதை இஸ்ரோ வடிவமைத்துஉள்ளது.இதுதவிர ,அமெரிக்காவின் ஆஸ்ட்ரோகாஸ்ட் ,இந்தியா -பூடான் கூட்டுத் தயாரிப்பான ஐஎன்எஸ் -2பி ,துருவ ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட் ,பிக்சலின் ஆனந்த் உட்பட 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி -54 ராக்கெட் மூலம் வெவ்வேறு சுற்றுப் பாதைகளில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
2.உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வரும் நவம்பர் 30- ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளார்.இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் நலமருத்துவரான சௌமியா சுவாமிநாதன் ,கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பின் முதலாவது தலைமை விஞ்ஞானியாக நியன்மிக்கபட்டார்.மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராச்சிக்கள் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் மிக்க இவர்,காசநோய் ,ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளால் உலகப் புகழ் பெற்றவர்.முன்னதாக ,இவர் மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் செயாளராகவும் ,இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் காகவுன்சிலின் தலைமை இயக்குனராகவும் (2015முதல் 2017 வரை ) பதவி வகித்தவர்.
3.சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி,விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை (நவ .25)ரிப்பன் மாளிகை,நேப்பியர் பாலம் ஆகியவை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படவுள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான நவம்பர் -25 முதல் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் .10-ஆம் தேதி வரை 16 நாட்கள் வரை சர்வதேச அளவிலான பாலின வன்முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.இதில் சென்னை மாநகராட்சியும் பங்கேற்க்க உள்ளது.இதை வெளிப்படுத்தும் வகையில் ,சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டடம் ,நேப்பியர் பாலம் நவ.25,டிச .2,10 ஆகிய 3 நாள்களில் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட உள்ளது.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக ஐ .நா .சபை ஆரஞ்சு நிறத்தை பெண்கள் ,சிறுமிகளுக்கு எதிரான வன்முறை இல்லாத பிரகாசமான ரதிர்காலத்தின் அடையாளமாகத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஆமைகள் மற்றும் நன்னீர் ஆமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.பனாமாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இந்தியா தெரிவித்து உள்ளது.பனாமா சிட்டியில் அழிந்து வரும் வன உரிமங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக தொடர்பான சுற்றுசூழல் குறித்து மாநாட்டில் இந்தியா இந்த உறுதியை அளித்ததாக மத்திய சுற்றுசூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் இந்த கருத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.
5.மத்திய நிலக்கரி அமைச்சக செய்திகுறிப்பிப்பு நாட்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 18% அதிகரித்தது.448 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.இது நவம்பர் மாத இறுதிக்குள் இந்த அளவு 30 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி கையிருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
6.கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்ததன் மூலாம் 5 உலக கோப்பைகளில் (2006,2010,2014,2018,2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் ரொனால்டோ.
7.மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
-Bakya
Receiver Team