1. ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை இந்தியா
முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை ஏற்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு ;சர்வதேச நலனை முன்னிறுத்தி இந்தியா செயல்படும் என 'மனதின் குரல் 'நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .
2.குடியரசு தின விழா தலைமை விருந்தினர் எகிப்து அதிபர் எல் -சிசி
தேசிய தலைநகர் தில்லியில் ஜனவரி 26-இல் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபதா எல் -சிசி பக்கிரகவிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் ஞாற்றுக்கிழமை தெரிவித்தது.இந்தியா -எகிப்த்து இடையிலான தூதரக ரீதியிலான உறவுகள் நிறுவப்பட்டு 75-ஆவது ஆண்டை இரு நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
3.வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டை புதுப்பிக்க பெரும் திட்டம்
வாரணாசியில் மகாகவி பாரதியார் நான்கு ஆண்டு காலம் வாழ்ந்த வீடான 'சிவமடத்திதை 'புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசியிலனையில் உள்ளது என்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ் .ராஜலிங்கம் ,பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியது.
4. ஐ.நா . தலைமையகத்தில் முதல் முறையாக மகாத்மா காந்தி சிலை
ஐ .நா. தலைமையகத்தில் முதல் முறையாக டிசம்பர் .14- ஆம் தேதி மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது. தற்போது ஐ .நா. வில் திறக்கப்படடுள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2 -வது பரிசாகும்.
5.இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகிறார் பி . டி உஷா
முதல் பெண் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகிறார் முன்னாள் தடகள வீரர் பி .டி .உஷா .இந்தியாவின் தங்க மங்கை ,தடகள நாயகி ,ஆசிய தடகள அரசி உள்ளிட்ட பல பெயர்களுக்கு சொந்தக்காரர்.இவர் கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பயொலி கிராமத்தில் 1964-ம் ஆண்டு பிறந்தவர்
6.Har Ghar Jal
Jal Jeevan Mission
ஜல் ஜீவன் மிஷன் 15 ஆகஸ்ட் 15 2019 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.இது 2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த ஜல் ஜீவன் மிஷன் தமிழ்நாட்டில் தர்மபுரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
7 .மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிக்கான நிரந்தர நடைபாதையை உதயநிதி திறந்து வைத்துள்ளார்
மெரினா கடைக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைப்பாதையை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி திறந்து வைத்தார். இது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கூடி மதிப்பீட்டில் நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளது.
8 . ஷ்ல்ப் குரு ,தேசிய விருது
சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஷ்ல்ப் குரு மற்றும் தேசிய விருது வழங்கப்படுகின்றன.கைவினைத் துறையில் தலைசிறந்த கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.இந்த விழா டெல்லியில் நடைபெறும் இதில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீஷ் தன்கர் விருதுகளை வழங்குவார்.
9.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் தமிழ்நாட்டில் இன்று முதல் தொடக்கம்.
-Bakya
Receiver Team