1. இந்தியா மலேசியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்க்கொள்ளும் 'ஹரிமாவ் சக்தி -2022' எனும் கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்ளு வாங்கில் உள்ள புழையில் திங்கள் கிழமை தொடங்கியது.இந்திய ராணுவத்தின் கார்வால் ரைபிள் படையும் ,மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் பதியம் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுப்ட்டுள்ளன. 'ஹரிமாவ் சக்தி' எனும் இப்பயிற்சி கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
2.'எங்கும் அறிவியல் -யாதும் கணிதம் 'என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் 'வானவில் மரம் 'திட்டத்தை முதல்வர் மு .க .ஸ்டாலின் ,நிகழ்ச்சியில் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.
3.வெளியுறவுத் துரைச் செயலர் வினய் மோகன் குவாத்ராவின் பணிக்காலத்தை மேலும் 14 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வது மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவு விட்டது.
4. கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 83 மெட்ரிக் டன் அதிகரித்து உள்ளது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
பால்வரைத்துறையின் தந்தையாக் கருதப்படும் டாக்க்டர் வர்கீஸ் குரியனின் 101-ஆவது பிறந்த தினம் நவம்பர் 26 நினைவு கூரப்பட்டது.
5.விஜய் ஹஸாரே கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மஹாராஷ்டிரா கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ,'லிஸ்ட் ஏ ' கிரிக்கேட்டில் புதிய உலக சாதனை புரிந்தார்.
-Bakya
Receiver Team