1.குஜராத் சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை நடைப்பெற்ற முதல் கட்ட தேதலில் ,61 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகின.89 தொகுதிகளிலும் பரவலாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைப்பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. நவம்பரில் சரக்கு -சேவைவரி (ஜிஎஸ்டி) ரூ .1.46 லட்சம் கோடி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இப்போது 11 சதவீதம் அதிகம் ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளது.
3.தமிழநாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி.நெடுஞ்செலியன் வியாழக்கிழமை டிசம்பர் .1 பொறுப்பேற்றார்.1996-ஆம் ஆண்டு ஐ .ஏ .எஸ் அதிகாரியாக பணியாற்றினார்.தற்போது தமிழகத்தின் 37 துறைகளில் 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏ ஜி )அமைப்புக்கு அவர் தலைமை வகிக்கிறார்.இந்த அமைப்பு மாநில அரசின் ,நிதி ,வருவாய் ,சுகாதாரம் ,கல்வி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனம் ஆகியவற்றைத் தணிக்கை செய்யும் பொறுப்பை மேற்கொள்ளுகிறது.
4.தமிழகத்தில் எயிட்ஸ் நோயால் 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத் துறை , நல்வாழ்வு மையத்தில் 'உலக எய்ட்ஸ் 'தின 2022 விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப்பெற்றது .
5.'ஒரே நாடு ஒரே உரம்' திட்டத்தில் நாட்டிலேயே முதலாவதாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் தயாரிப்பான 'பாரத் யூரியா ' வியாழக்கிழமை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Bakya
Receiver Team