1.பார்வையற்றோர் உள்பட 4.39 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது என முதல்வர் மு.க .ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ரூ .1000- லிருந்து ரூ .1,500- ஆக உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை வரும் ஜனவரி 1- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
2. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ )உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்ன்னேறியது.இந்தியாவின் மதிப்பெண் 85.49% ஆகும்.இந்தியா 4 ஆண்டுக்கு முன்னர் 102- ஆவது இடத்தில் இருந்தது தற்போது 48- ஆவது இடத்துக்கு முன்னேறியது.இந்த தரவரிசையில் முதலிடத்தில் சிங்கப்பூர் ,இரண்டாம் இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் ,மூறாவது இடத்தில் தென் கொரியா. சீனா 49- ஆவது இடத்தில் உள்ளது .
3.கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் உயிரி பொருளாதார மதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.கடந்த - 2014 - ஆம் ஆண்டு புதிய உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஸ்டார்ட-அப் )எண்ணிக்கை 52- ஆக இருந்தது .இது நிகழாண்டு 5,300-ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1,128 உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன.
4.மத்தியபிரதேச மாநிலம் ,போபாலில் கடந்த 1984-இல் நிகழ்ந்த விஷவாயு கசிவு பேரழிவு சம்பவத்தின் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.உலகிலேயே மிகமோசமான தொழிலாக பேரிடர்களில் இச்சம்பவமும் ஒன்றாகும்.மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் பெயர் சிவராஜ் சிங் சௌஹான் ஆவார்.
5.இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தையொட்டி ,பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சனிக்கிழமை புகழஞ்சலி செலுத்தினார். பீகாரில் 1884-ஆம் ஆண்டு பிறந்த ராஜேந்திர பிரசாத் ,முன்னணி சுதந்திரப் போராட்ட வீரராகவும் மகாத்மா காந்தியுடன் நெருக்கமாகவும் இருந்தவர்.இரண்டு முறை குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Bakya
Receiver Team