1. டிசம்பர் -6 .சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்நினைவு தினம் இன்று. கற்பி ,ஒன்று சேர் ,புரட்சி செய் என்றவர் .
2.குஜராத் சட்டப் பேரவைக்கு நடைப்பெற்ற 2- ஆவது கட்டத் தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இருக்கட்டத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 8- ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
3.நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது சாம்பியன் கோப்பையை ,ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.இத்தகையை பெருமையைப் பெறும் முதல் இந்திய நடிகை அவர் ஆவார்.
4.குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிச் கல்லூரியில் முப்படைகளின் தலமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் திங்கள்கிழமை ஆய்வு செய்து ,பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ,குன்னுர் அருகேயுள்ள வெலிங்டன்ராணுவ மையத்துக்கு வந்தார்.
5.கத்தாரில் நடைப்பெறும் பிப்பா கால்பந்து போட்ட்டிக்காக தமிழர்கள் உருவாக்கிய தீம் பாடலை அந்நாடு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவம் வழங்கியுள்ளதாக தீம் பாடலை இயற்றி ,இசையமைத்த சாம் ஜோசப் தெரிவித்தார்.
- Bakya
Receiver Team