1. சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் சோப்த்தராக லலிதா திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் ,தங்களது அறையிலிருந்து நீதிமன்ற அரங்கத்துக்குச் செல்லும் போது ,அவருக்கு முன்பாக சோப்தார் என்ற உதவியாளர்கள் செல்வர் .இவர்கள் வெள்ளை சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப் பாகை அணிந்த நிலையில் ,நீதிபதிகளின் வருகையை உணர்த்தும் வகையில் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை செய்தவாறு செல்வது வழக்கம். இதுவரை ஆண்கள் மட்டுமே சோப்த்தராக நியமிக்கப்பட்ட நிலையில்,சென்னை உயர்நிதிமன்றத்தில் கடந்தாண்டு முதல் பெண் சோப்த்தராக திலானி நியமிக்கப்பட்டார்.
2.இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி )வளர்ச்சி கணிப்பை 6.9 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது.பணவீக்கம் 7.1 சதவீதமாக இருக்கும் நிலையில்,அடுத்த நிதியாண்டில் (2023-2024) 5.2 சதவீதமாகக் குறையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.மகாராஷ்டிரத்தில் உள்ள நாகபுரி மெட்ரோவின் 3.14 கிமீ தொலைவிலான ஈரடுக்கு பாலம் என்ற வகையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது .
4.தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி (என்எப்எஸ்ஏ) இந்தியாவின் கடைக்கோடி மனிதருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் ,இ -ஷ்ரம் இணையதள பக்கத்தில் பதிவு செய்த புலம்பெயர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கக்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
5.தேசத்தின் ஒருமைப்பாடு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்க வீரத்துடன் போராடிய வீரர்களின் நினைவாக 7.12.1949- முதல் முப்படை வீரர்களின் கொடி நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
6.சர்வதேச சூழல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டுத்தொடர் புதன்கிழமை (டிசம்பர் -7) தொடங்கவுள்ளது.
7.தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக அம்பேத்கர் சிலை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.இந்தச் சிலையை ஆளுநர் ஆர் .என் .ரவி ,அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் திறந்துவைத்தனர்.
8.சர்வதேச பாட்மிட்டன் சம்மேளத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாராபாட்மிட்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராம்தாஸ் வென்றுள்ளார் .
-Bakya
Receiver Team