1.மகாகவி பாரதியார் அவர்களின் 141 - ஆவது பிறந்தநாள் இன்று . மகாகவி பாரதியார் மறைந்து நூற்றாண்டு நினைவாக உத்திரபிரதேச மாநிலம் ,வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லம் மற்றும் அன்னாரின் மார்பளவுச் சிலையினை திரு மு .க .ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைப்பார்கள்.
2.ஹிமாச்சல பிரதேச 15- ஆவது முதல்வராக சுக்விந்தர் சிங் சுக்கு ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 11) பதவியேற்றுக் கொண்டார்.துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பொறுப்பேற்றார்.
3.காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை ,காசி- தமிழகம் இடையே தொடங்கப்பட உள்ளது.
4.கோவாவில் மோபோ சர்வதேச விமான நிலையத்தை நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
5.இந்திய மொழிகள் தினம் டிசம்பர் -11 கொண்டாடப்படுகிறது.
6. நபார்டு வங்கியின் புதிய தலைவராக கே .வி .ஷாஜி நியமிக்கப்பட்டார்.நபார்டு வங்கியின் தலைமையகம் - மும்பையில் உள்ளது.
7.பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதி ,இறுதி ஆட்டங்களில் பயன் படுத்தப்பட உள்ளஅதிகாரப்பூர்வ பந்து என்ற சிறப்பை அல்ஹில்ம் பெற்றுள்ளது.அடிடாஸ் நிறுவன தயாரிப்பால் உருவானது அல் ஹில்ம். அரேபிய மொழியில் அல் ஹில்ம் என்றால் கனவு என்று அர்த்தம் ஆகும்.
-Bakya
Receiver Team