பிபிஎஃப் கணக்குடன் ஆதார் - பான் இணைப்பு கட்டாயம்
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோர் தங்கள் கணக்குடன் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் செப்டம்பர் 30- தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ரூ.1,000 அபரத்தத்துடன் கூடிய அவகாசம் ஜூன் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முதலீடு திட்டங்களுக்கு ஆதார்-பான் இணைப்பு ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனினும், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிபிஎஃப்), பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருத்தி சேமிப்பு திட்டம், தபால் நிலைய வைப்புத் தொகைத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்புபத் திட்டங்களில் இணைவதற்கு ஆதார் எண் முன்பு கட்டாயமாக்கப்படவில்லை. இந்நிலையில், திட்டங்களில் இணைவதற்கு ஆதார் எண் முன்பு கட்டாயமாக்கப்படவில்லை இந்நிலையில் அத்திட்டங்களில் இணைவதற்கு ஆதார் எண்ணும் பான் எண்ணும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதித் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களில் ஏற்கனவே இணைந்துள்ளோர் தங்கள் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் ஆதார், பான் எண்கள் இணைக்கப்படாத கணக்குகள் முடக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது .ஆதார் எண் இல்லாமல் சிறு சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள், ஆதாரை பெறுவதற்காக விண்ணப்பித்த எண்ணைத் தற்காலிகமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சிறுசேமிப்புக் கணக்கு தொடங்கிய ஆறு மாதத்துக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட கணக்கு முடக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-Bakya
Receiver Team