மும்பைவாசிகளே!!!!
தமிழ் நாட்டில் அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து வரும் மக்கள் மும்பைக்கு வந்த பின்பு ஏங்கும் ஒரே விஷயம் சாப்பாடு தான். அதிலும் சென்னைவாசிகள் மிகவும் விரும்பும் உணவான பிரியாணி. மும்பை போன்ற மாநகரத்தில் தமிழ்நாட்டு உணவகங்கள் வெகு குறைந்த இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.
அப்படி கிடைக்கும் சில இடங்களிலும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு ருசியாக இருப்பதில்லை. ஆனால் ருசியாகவும் விலையிலும் கட்டுப்படி ஆகும் அளவிற்கு உள்ள ஒரு உணவகம் தான் இந்த "அண்ணா ஆம்பூர் பிரியாணி".
இந்த அண்ணா ஆம்பூர் பிரியாணி உணவகம். மும்பை பவாய் பகுதி அருகே அமைந்துள்ளது. L&T Gate No 6 ஸ்டாப்பிங்க் அருகே அமைந்துள்ள வனிக பகுதியில் உள்ளது. இங்கே அசைவ உணவான சிக்கன், மட்டன் பிரியாணி, பரோட்டா, சிக்கன் கிரேவி என அனைத்து உணவுகளும் கிடைக்கிறது.
பரோட்டாவும் சிக்கன் கிரேவியும் இங்கே ஸெபஷல். இங்கு செல்பவர்கள் இதை சுவைத்து பார்க்கவும். விலையும் 130 ₹ மட்டுமே. சிறிய அளவே உள்ள இந்த உணவகத்தில் 15 நபர்கள் வரை அமர்ந்து சாப்பிடலாம். பிரியாணி நம் சென்னையில் கிடைப்பது போலவே பாஸ்மதி அரிசியில் உள்ள பிரியாணி.
மும்பையில் வசிக்கும் தமிழர்கள் நமது சென்னையில் உள்ளது போல் பிரியாணி சாப்பிட இங்கே செல்லலாம். முகவ்ரி இங்கே கிளிக் செய்யவும்
-Receiver Team
#AnnaAmburBiryani #Biryani #Mumbai #AmburBiryaniInMumbai #ParottaWithChickenCurry