PICME - Registration மற்றும் RCH ID என்றால் என்ன?

 




கர்ப்பிணிக்களுக்காக

தமிழக அரசின் "பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம்" Directorate of Public Health Preventive Medicine. சார்பாக அமைக்கபட்ட ஒரு திட்டம் தான் "PICME - Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation" 



PICME  மூலம் RCH - ID பெற வேண்டும்.

RCH என்றால் Reproductive and Child Health திருமணம் ஆகிய மற்றும் கர்ப்பிணி பெண்கள் (15 முதல் 49 வயது வரை) அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிரின் அனைத்து பிரசவத்திற்கும் இந்த RCH - ID யை பயன்படுத்தலாம்.

RCH ID யாரிடமிருந்து பெறுவது?

கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் செவிலியரிடம் அல்லது நகர்புற சுகாதார நிலைய செவிலியரிடமும் பெறலாம்.


RCH ID கட்டாயம் தேவையா?

ஆம், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கர்பிணிகளுக்கும் அவசியம் தேவையான ஒன்று. பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற இந்த RCH ID கட்டாயம் தேவை.


RCH ID பெற எத்தனை நாட்கள் ஆகும்?

தாங்கள் வசிக்கும் பகுதியை பொருத்து வேறுபடும். அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்.

குழந்தை பிறக்கும் பொழுது RCH ID இல்லாவிட்டாலும் பிறந்த உடனே பதிவு செய்து விட வேண்டும். இல்லாவிடில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. 

RCH ID கர்பிணிகளுக்கு மட்டும் தானா?

கர்பிணிகளுக்கு மட்டுமல்ல திருமணமான அனைத்து மகளிருக்கும்.

ஒவ்வொரு முறை கருத்தரித்த பின்பும் (VHN/UHN - Village Health Nurse / Urban Health Nurse) இவர்களிடம் தெரிவிக்க வேண்டும். 

ஏற்கனவே பதிவு செய்து இருந்தால் அந்த RCH ID யை குறிப்பிட்டு கர்ப்ப பதிவை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவினால் என்ன பயன்?

கர்பிணி பெண்கள் தாங்கள் கருத்தரித்திருப்பதை பிரசவிக்கும் நாளுக்கு 12 வாரத்திற்கு முன்பாக பதிவு செய்திருந்தால். 
"சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்" மூலம் "Dr. Muthulakshmi Maternity Benefit Scheme" என்ற திட்டத்தின் கீழ் ஏழை கர்பிணிகளுக்கு ரூபாய் 12,000 முதல் 18,000 வரை உதவித் தொகை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள. இங்கே அழுத்தவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா?

ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம். 
https://picme.tn.gov.in/picme_public/ என்ற இணையதள முகவரிக்கு சென்று கர்ப்ப பதிவிற்கான முன் தகவல் தெரிவிக்கலாம்.




தங்களை குறித்த தகவல்களை நிரப்பி பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஒப்புகைச் சீட்டு Save செய்த பிறகு காண்பிக்கும். அந்த ஒப்புகைச் சீட்டை (Download) செய்து (Print) எடுத்து வைத்துக் கொள்ளவும்.


இந்த சீட்டு கிடைத்த பின்பு குறிப்பிட்டுள்ள செவிலியர் தங்கள் இருப்பிடத்திற்கே வந்து உறுதி செய்து கொள்வார்.

அருகிலுள்ள E-Seva மையத்திலும் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மற்றொரு வழியிலும் பதிவு செய்யலாம். 102 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொர்பு கொண்டும் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பதிவு செய்யலாம்.

தேவையான ஆவனங்கள் மற்றும் தகவல்:

  1. ஆதார் அடையாள அட்டை (Dr Muthulakshmi Maternity Benefit scheme).
  2. அலைப்பேசி எண்.
  3. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கியிருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்திலுள்ள செவிலியர்/மருத்துவரை அனுகவும்.


அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் சேர வேண்டிய தகவல். இந்த RCH ID ன் அவசியத்தை தெரிவியுங்கள்.

-Receiver Team🙏
Previous Post Next Post