மகிழம்பூ முறுக்கு
Magizhampoo Murukku/Mullu Murukku |
மகிழம்பூ முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சரிசி ஒரு கிலோ,
- பாசிப்பருப்பு 250 கிராம்,
- தேங்காய் ஒன்று,
- ஏலக்காய் 2,
- ஜீனி 150 கிராம்,
- நெய் 50 கிராம்
- எண்ணெய் ஒரு லிட்டர்.
மகிழம்பூ முறுக்கு செய்முறை
பச்சரிசியை எடுத்து நன்றாக கழுவி காயவைத்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் பாசிப்பருப்பை பொன்னிறமாக நன்றாக வறுத்து அதை உடைத்து எடுத்துக் கொள்ளவும். வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொண்ட பச்சரிசியையும் ,உடைத்து எடுத்துக் கொண்ட பாசிப்பருப்பையும் இரண்டையும் மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.தேங்காய் நன்றாக துருவி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அரைத்துவைத்த மாவுடன் + ஜீனி +ஏலக்காய் +சிறிதளவு உப்பு +எள்ளு+நெய் சேர்த்து நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சூடான பிறகு முறுக்கு பிழியும் மூன்று கண் ஸ்டார் அச்சை பயன்படுத்தி முருக்கை பிழிந்து விடவும்.
இப்போது சுவையான மகிழம்பூ முறுக்கு தயார்.
✍Bakya
Receiver Team
#mullu_murukku #magizhampoo_murukku #food_recipes #receivermedia #receiver