தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரயில்வே/ வங்கி / SSC / தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த 100 நாள் கட்டணமில்லா பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரயில்வே / வங்கி /SSC ஆகிய ஒன்றிய அரசு தேர்வுகளை வெல்வதற்கான சிறப்பு பயிற்சி.ரயில்வே வங்கி எஸ் எஸ் சி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு என்பது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவால் வடிவமைக்கப்பட்ட பயிற்சி திட்டம் ஆகும்.இப்ப பயிற்சி திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 150 விண்ணப்பதாரர்களை ஏற்கின்றது. 150 க்கும் மேல் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கல்விக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு: ***தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 100 நாள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 25. 05.2023 முதல் தொடங்கப்பட இருக்கிறது.
வகுப்புகள்
- 300 மணி நேரம்
பயிற்சி தேர்வுகள்
- 120 தேர்வுகள்
பயிற்சி புத்தகங்கள்
- பாடநூல்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.02.2023
மேலும் விபரங்களுக்கு
அறிவிப்பு: https://www.naanmudhalvan.tn.gov.in/pdfs/Notification.pdf
விண்ணப்பம்:http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX
✍Bakya
#naan_mudhalvan #naanmudhalvan #govtexam #tnpsc #ssc #bankexam #crackit #success