மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தின் புதிய அமைச்சராக பதவி ஏற்று கொண்டார்.சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனின் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். டி.ஆர்.பி ராஜா பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு.
திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி. ஆர்.பாலுவின் மகன் ராஜா மன்னார்குடியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக தங்கம் தென்னரசும் , தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பி. டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம். பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமனம். தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சராக சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
✍Bakya
Receiver Team