வணக்கம்... எனக்கு இயக்குனர் ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை திரைப்படம் எனக்கு ரொம்ப புடிச்சது அதன்பிறகு சிவகார்த்திகேயனோடு இணைந்து அயலான் அப்படின்ற ஒரு படம் பண்ண போறாரு அறிவிப்பு வந்த போது அதுவும் ஏலியன்ஸ் ரிலேட்டடா இருக்கும் அப்படின்னு சொல்லும்போது ரொம்ப ஆர்வமா இருந்துச்சு அந்த படம் எப்படி வரும் என்ன வரும் எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சி இதன் மேலான ஒரு எதிர்பார்ப்பு அதிகமா இருந்துச்சு.
எதிர்பாராதவிதமா ரொம்ப கால தாமதமானதால படக்குழு தரப்பில் நிறைய சொன்னாங்க ஆனாலும் ஒரு ரசிகனா அவருடைய படைப்பு எந்த மாதிரி இருக்கும் அப்படின்ற ஒரு எதிர்பார்ப்பு அதிகமா இருந்துச்சு. எல்லாத்துக்கும் மேல அவரு இந்த ஒரு படத்துக்கு மேல வச்சிருந்த அந்த ஒரு பொறுமை அந்த படத்தின் நம்பிக்கை இதெல்லாம் அவர் அவருடைய பேட்டி வழியா காணும் போது இன்னும் அந்த படத்தை பார்க்கணும்ன்ற ஆர்வம் எனக்கு தோணுச்சு அதன் பேரில். அந்த படத்தை இன்றைக்கு நான் பார்த்தேன் உண்மையா ஒரு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரில இப்படி ஒரு முயற்சி எடுத்ததுக்கு அவர கண்டிப்பா பாராட்டணும் ஏன்னா இதுல இதோட பட்ஜெட்டோ எனக்கு உண்மையா தெரியாது ஆனாலும் இதுவரைக்கும் வந்த தமிழ் சினிமால இந்த மாதிரியான ஒரு தத்துரூபமா நம்பகத்தன்மையோடு எல்லாருக்கும் புடிக்கிற மாதிரியான ஒரு வி எப் எக்ஸ் க்கு கண்டிப்பா பாராட்டணும் இது குறைந்த பட்ஜெட்டா இருக்கட்டும் அதிக பட்ஜெட்டா இருக்கட்டும் இதுல அவங்களை பாராட்டியே ஆகணும் அப்படிங்கறதுதான் நான் இந்த ஒரு பதிவு மூலமாக தெரிவிச்சிக்க விரும்புறேன்.
இந்த கதைக்களம் என்பது வழக்கமாக உள்ள கதைகளா இருக்கலாம் எல்லாமே இருக்கும் ஆனால் நகைச்சுவை எதுவுமே திணிக்கப்படல கதையோட ஓட்டத்திலேயே எல்லாமே இருந்துச்சு பாடல்களும் தேவையான இடத்தில மட்டும் இருந்துச்சி தேவைக்கு இல்லாம எல்லா இடத்திலும் பாடல்கள் வரல முக்கியமா சொல்லப்போனால் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்களுடைய இசை மிகப்பெரிய ஒரு பங்கு எல்லாத்துக்கும் மேல இந்த கதையை தேர்ந்தெடுத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் கண்டிப்பா பாராட்டனும். முக்கியமாக இந்த கதையை தேர்ந்தெடுத்து ஒரு காலகட்டத்தில் அவர் ஒரு பெரிய ஸ்டாரா இருந்தாலுமே அந்த அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு முயற்சிக்கு அவர பாரட்டனும். இந்த படம் ஆரம்பித்த கலகட்டத்தில் இந்த முடிவு சவலாக தான் இருந்துருக்கும். முக்கியமா இந்த கதை, இந்த படம் எல்லா சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் கண்டிப்பா பிடிக்கும் ரொம்ப அழகா எடுத்திருந்தாங்க எல்லாத்துக்கும் மேல அந்த கதைக்கு அந்த ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்த சித்தார்த் அவங்களோட வாய்ஸ்மே ரொம்ப தத்ரூபமா இருந்துச்சு அவர் பண்ண சின்ன சின்ன நகைச்சுவை சின்ன சின்ன விஷயங்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு. மொத்தத்தில் இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. சின்ன சின்ன லாஜிக்கல் இதெல்லாம் நம்புற அளவுக்கு வச்சிருக்காங்க அது வந்து ரொம்ப ரொம்ப பெரிய விஷயம் இதுல இதுக்கெல்லாம் வாய்ப்பு இருக்கா இதெல்லாம் வந்து நடக்குமா அப்படின்றதெல்லாம் விட இத நம்புற மாதிரியான ஒரு திரைக்கதை எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்துச்சு இதுல இருக்க அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிறேன். கண்டிப்பா இந்த ஒரு திரைப்படம் ஒரு தமிழ் சினிமாவுக்கு முக்கியமா அதிலும் குழந்தைகளுக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் அவங்களுக்கான ஒரு படம் அப்படின்றது தான் மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் எல்லாருமே ஆக்சன், திரில்லர், க்ரைம் இப்படியே நம்ம தமிழ் சினிமா வேற ஏதோ ஒரு திசையில போயிட்டு இருக்குற மாதிரியே இருந்தது. குழந்தைகள் அப்படின்னு குழந்தைகளுக்கான படம் குடும்பத்துக்கான படம் அப்படின்ற மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் வந்து ரொம்ப வறட்சியா இருக்கு அப்படி வந்து குழந்தைகளுக்குன்னு கடைசியா வந்த படம் சொல்லப்போனால் எனக்கு தெரிஞ்சு ரொம்ப காலம் இருக்கு. அதிக நாட்கள் பிறகு வந்த குழந்தைகளுக்கான திரைப்படம் இந்த அயலான் திரைப்படம் தான்.
வாழ்த்துக்களுடன்
✍️பிரதாப்
Receiver Team